இயற்கைப் பூச்சிக் கொல்லிகள்

தோட்டத்தில் வளரும் செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பூச்சிக் கொல்லிகளை தோட்டத்தில் தெளிக்கின்றோம். ஆனால் அவற்றை அடிப்பதால், செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் செடிகளுக்கு உரமாக இருக்கும் சில பூச்சிகள் அழிந்துவிடுகின்றன. அதுமட்டுமின்றி, தோட்டத்தில் விளையாடும் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளின் உடலுக்குக் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசுபடுதல் போன்றவை ஏற்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் எதுவுமின்றி, செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரவும், எந்த ஒரு உயிருக்கும் பாதிப்பும் ஏற்படாமலும் இருக்க இயற்கைப் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம். அந்த பூச்சிக்கொல்லிகள் என்னவென்று பார்ப்போமா!!!

* முட்டை ஓட்டை நன்கு உடைத்து, உப்புடன் சேர்த்து தோட்டத்தில் போட்டால், நத்தைகள் போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம். எப்படியெனில் முட்டை ஓடுகள் அவற்றிற்கு கண்ணாடித்துகள்களைப் போன்று இருக்கும். மேலும் உப்பு எந்த ஒரு பூச்சியையும் வராமல் தடுக்கும்.

* சிறிது பூண்டை தோலுடன் நசுக்கி, சிறிது மிளகுத்தூள், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நீர் ஆகியவற்றை கரைத்து, செடிகளின் மேல் தெளித்தால், அவை செடிகளை எந்த ஒரு பூச்சிகளும் அரிக்காமல் பாதுக்காக்கும்.

* டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை நீருடன் கலந்து, தோட்டத்தில் விட்டால், தோட்டம் நன்கு சுத்தமாக காணப்படும்.

* தக்காளியின் இலைகளில் நிறைய அல்கலாய்டுகள் உள்ளன. அவை செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. ஆகவே தக்காளியின் இலைகள் எங்காவது கிடைத்தால், அவற்றை நசுக்கி நீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த நீரை செடிகளுக்கு தெளித்தால், செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

* வேப்பிலையில் நிறைய பூச்சிகளை அழிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவற்றை அரைத்து நீரில் கரைத்து, செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் அழிவதோடு, மீண்டும் பூச்சிகள் வராமலும், வேறு எந்த ஒரு நோயும் தாக்காமலும் இருக்கும்.

* காப்பி போடும் போது, அதனை வடிகட்டினால் வரும் மண்டியை வெளியே தூக்கிப் போடாமல், செடிகளைச் சுற்றி போட்டால், அவை எந்த ஒரு பூச்சியும் செடியை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். மேலும் செடிகள் பூச்சியின் தாக்கத்தினால், வலுவிழந்து காணப்பட்டாலும், அதனை சரிசெய்துவிடும்.

tamil.boldsky.com

Leave a Reply