தோட்டத்தில் வளர்க்கக்கூடிய சமையலில் பயன்படும் செடிகள்

இந்திய உணவுகளுக்கு உயிர் தருவது காரம் தான். அந்த காரம் இல்லாவிட்டால், அது வேஸ்ட் தான். அவ்வாறு காரத்தை தரும் பொருட்களை, கடைகளில் இருந்து மட்டும் தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், அங்கு பூச்செடிகளை மட்டும் வைத்து பயன்படுத்தாமல், அங்கு வீட்டின் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வைத்தும் பலன்களைப் பெறலாம். இவ்வாறு உணவுகளுக்கு காரத்தை வழங்கும் பொருட்கள் உணவிற்கு மட்டுமின்றி, நோய்கள் பலவற்றை குணப்படுத்தவும் பெரிதும் துணைப்புரிகின்றன. இப்போது எந்த மாதிரியான மூலிகை மற்றும் சமையலுக்குப் பயன்படும் செடிகளையெல்லாம் வீட்டில் வளர்க்கலாம் என்று ஒருசில செடிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய செடிகள் எந்தஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு அதிகப்படியான பராமரிப்பு இல்லாமலும் வளரக்கூடியது. சரி, அந்த செடிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கறிவேப்பிலை

இந்த செடிரய பெரும்பாலான வீடுகளில் காணலாம். இந்த செடி வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 26-37 டிகிரி செல்சியஸ் ஆகும். மேலும் இது ஒரு சிறந்த வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ப வளரக்கூடிய செடிகளுள் ஒன்று.

மிளகாய்

மிளகாய் செடி சிறியதாக தான் இருக்கும். மேலும் இதன் உயரம் அதிகப்படியாக 2 மீட்டர் தான் இருக்கும். இத்தகைய செடியை வைக்கும் போது, அதன் விதைகள் முளைப்பதற்கு 20°C வெப்பநிலையும், இதில் வரும் மிளகாய் நன்கு பழுப்பதற்கு 30°C வெப்பநிலையானது இருக்க வேண்டும். மேலும் இரவு வெப்பநிலையானது 15°C-க்கு குறைவாக இருக்கக்கூடாது.

துளசி

துளசி செடிகளை வளர்ப்பது என்பது மிகவும் எளிமையான ஒரு விஷயம். இத்தகயை செடிகள் வெதுவெதுப்பான காலநிலையிலும் வளரக்கூடியது. ஆனால் இதற்கு அதிகப்படியான தண்ணீர் மற்றும் அதிகமான இடம் மிகவும் அவசியம். எனவே இத்தகைய செடியை பெரிய தொட்டியில் வைத்து, வேண்டிய இடத்தில் வளர்க்கலாம்.

இஞ்சி

இஞ்சியை சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம். மேலும் இது வளர்வதற்கு வெதுவெதுப்பான காலநிலையும், ஈரப்பதமும் இருக்க வேண்டும். இத்தகைய செடியை வளர்ப்பதற்கு சிறந்த காலம் என்றால், அது குளிர்காலத்தின் இறுதியும், வசந்த காலத்தின் ஆரம்பமும் தான் சரியானது. இந்த செடியை வைத்தால், ஆரம்பத்தில் சிறிய இலைகள் மட்டும் தான் இருக்கும். காலப்போக்கில் அது தடிமனாகி, பின் பெரியதாக மாறும். இதனால் இஞ்சியும் பெரியதாக கிடைக்கும்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி ஒரு வற்றாத, மரப் புதர் போன்று வளரும் ஒரு மூலிகைச் செடி. இது 2-3 ஆண்டுகள் இருக்கக்கூடியது. இது வளர்வதற்கு நல்ல வடிகால், காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி போன்றவை நிறைய தேவை. இதனை களிமண்ணில் வளர்க்க வேண்டும். இதற்கு அதிகப்படியான தண்ணீர் ஊற்றக் கூடாது. ஏனெனில் இதன் மேல் பகுதி சற்று வறட்சியுடனும், உட்பகுதியில் மட்டும் ஈரப்பதம் இருந்தால் போதுமானது.

தைம் (Thyme)

இந்த செடிக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படாது. இந்த செடியானது வறட்சியான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. மேலும் இது நன்கு வளர்வதற்கு அதிகப்படியான உரம் வேண்டும் என்பதில்லை. இதனை அதிகப்படியான சூரிய வெளிச்சம் படும் இடத்திலும் வளர்க்கலாம்.

கொத்தமல்லி

கொத்தமல்லி செடிக்கு வேண்டியது தண்ணீர் தான். அதுவும் இதிலிருந்து பூக்கள் வரும் வரை தண்ணீர் மிகவும் அவசியம். இந்த செடி வளர்வதற்கு, கோடைகாலத்தில் வைத்தால் 4-5 வாரங்களிலும், குளிர் காலத்திரல் வைத்தால், பல மாதங்களும் ஆகும். எனவே இந்த கோடைகாலத்தில் மல்லி விதையை வீட்டின் தோட்டத்தில் வைத்து, தண்ணீர் ஊற்றி, வளர்க்கலாம்.

சோம்பு

உணவை சாப்பிட்டப் பிறகு, உணவு செரிமானத்திற்கு சாப்பிடப்படும் சோம்பையும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இது வளர்வதற்கு நல்ல வடிகட்டப்படும் மண்ணும், சூரியவெளிச்சமும் போதும்.

tamil.boldsky

Leave a Reply