வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்

துலிப் (Tulips)

வெண்மை அல்லது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ண துலிப்ஸ் மலர்க் கொத்துக்கள் நாட்களை மேலும் பிரகாசமாக்கும். இம்மலர்கள் மேலும் பல வண்னங்களில் கிடைத்தாலும், வெண்மை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண துலிப் மலர்களையே அனைவரும் விரும்புவர். லில்லியேசி (Liliaceae)குடும்பத்தினைச் சேர்ந்த துலிப் தாவரங்களே அனைவராலும் கவரப்படும் ஒன்றாக விளங்குகின்றன. பொதுவாக துலிப் மலர்கள் தண்டிற்கு ஒன்றாக மலர்கின்றன. அரிதாக ஒரு தண்டில் பல மலர்கள் மலர்கின்றன. இம்மலர்கள் பொதுவாக இளவேனிற் காலம் எனப்படும் வசந்த காலத்தில் பூக்கத் தொடங்குகின்றன. இதன் குமிழ் போன்ற வடிவம் அனைவராலும் கவரப்படும்.

டஃப்போடில் (Daffodil)

டஃப்போடில் என்று கேள்விப்படும் போதே நினைவுக்கு வருவது, ஒரு பளிச்சென்று பிரகாசமான மஞ்சள் நிற டஃப்போடில் மலர்கள் நிறைந்த மலர்த் தோட்டத்திற்கு நடுவே நிற்கும் காட்சி தானே? ஆனால், ஒரு டஃப்போடில் மலர்த் தோட்டத்திற்கு உரிமையாளராக முடியாது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு கொத்து டஃப்போடில் மலர்களை வாங்கி, வீட்டில் ஒரு கண்ணாடித் தொட்டியில் வைத்து அழகு பார்க்கலாம். டஃப்போடில்களின் இனிமையான நறுமணம், வீட்டிற்கு நல்லதொரு மனநிலையை பரப்பும். வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இம்மலர்கள் கிடைக்கின்றன.

அல்லி

அல்லிகள்,மிகவும் அழகான மற்றும் மென்மையான மலர்கள். இம்மலர்களின் நறுமணம் மனதை எப்போதும் புத்துணர்வுடன் நல்லதையே நினைக்க வைக்கும். அல்லி வகையைப் பொறுத்தவரை, அது நல்ல பழவாசனையை வீசும். அவை பல வடிவங்களிலும், பல அளவுகளிலும் கிடைத்தாலும், பெரும்பாலானவை குமிழ் வடிவ அல்லிகளே. மேலும் அவை நீளமான தண்டுகளை உடையவை. அல்லிகள் தூய்மையின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுபவை.

ரோஜா

மலர்களின் ராணியான ரோஜாவை அறியாதவர் யாருமே இருக்க முடியாது. யாரையாவது நேசித்தால், காதலை வெளிப்படுத்த மிக உன்னதமான வழி ஒரு ரோஜா மலரை நேசிக்கும் நபருக்கு அளிப்பது தான். வீட்டைச் சுற்றி ரோஜா மலர்கள் இருப்பது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தையும், புத்துணர்வையும் அளிக்கும். மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை, ஊதா, ஆரஞ்சு போன்ற பல வண்னங்களில் ரோஜா மலர்கள் இருந்தாலும், சிவப்பு வண்ன மலர்களே அதிகமாகக் கிடைப்பவை. நீல வண்ண ரோஜாக்கள் அரிதாக காணப்படுகின்றன.

டெய்ஸி (Daisies)

டெய்ஸிக்களில் ஆயிரக்கணக்காண வகைகள் உள்ளன. எனவே தேர்வு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இளஞ்சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு என்று எண்ணற்ற வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. டெய்ஸிக்களைப் பற்றிக் குறிப்பிடத்தக்க அழகியதொரு அம்சம் என்னவென்றால், இவற்றின் இதழ்கள் விடியற்காலையில் மலர்ந்து மாலையில் முடிவிடும். இந்நிகழ்ச்சியினை நாள்தோறும் கண்டு ரசிக்கலாம். டெய்ஸிக்களை வளர்ப்பவர்கள் கண்டு அதிசயிக்க வேண்டிய நிகழ்வு இதுவாகும்.

மல்லிகை
இவை மிகவும் அரிதான வகை மலர்கள். வீட்டில் வைத்து அவசியம் வளர்க்க வேண்டிய மலர் வகைகளுள் ஒன்று மல்லிகை. இனிமையான நறுமணமுள்ள மல்லிகையைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி, வீட்டில் வைத்து வளர்த்தல் மிகச் சிறப்பானதாகும். மல்லிகையில் பலவகைகள் இருந்தாலும், கேட்டிலியா (cattleya) மற்றும் டென்ரோபியம் (dendrobium) ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே அனைவராலும் விரும்பப்படுபவை மற்றும் எளிதில் கிடைப்பவையும் ஆகும். இவற்றை வீடுகளில் வளர்க்கலாம். மேலும் தேர்ந்தெடுப்பதற்கு எண்ணற்ற விதமான வண்ணங்களில் கிடைக்கின்றன.

சூரியகாந்தி

நாள் முழுவதும் புத்துணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும் மலர்களில் ஒன்று சூரிய காந்தி ஆகும். இவற்றின் பிரகாசமான மஞ்சள் நிறம், மனதை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும். மிக மெலிதான வாசனையை உடையவை இம்மலர்கள். அறையில் வைத்திருந்தாலும், இம்மலர்களின் அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் தான் வாசனையை உணர முடியும்.

tamil.boldsky

Leave a Reply