காற்றை தூய்மையானதாக மாற்றும் செடிகள்

மூங்கில் செடி

உங்கள் வீட்டை சுற்றிய காற்று மண்டலத்தில் சுற்றித் திரியும் அனைத்து வகையான ரசாயனங்களையும் நீக்க, மூங்கில் பனை செடி சிறந்ததாக விளங்கும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம் அதிகமாக தேவைப்படாது. அதனால் அதனை நிழலாக இருக்கும் வீட்டு பகுதியிலேயே வளர்க்கலாம். அது கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஃபார்மல்டீஹைடு, ஸைலீன், க்ளோரோஃபார்ம் மற்றும் ஏராளமானவற்றை நீக்கும். அதனால் துணி துவைக்கும் அறை, ஹால் அல்லது படுக்கையறையில் வைப்பதற்கு உகந்த செடியாகும் இது.

சீன வாஸ்து என்ற பெயரில் சிறிய அளவிளான மூங்கில் செடி வளர்க்கிறார்கள்.

மூங்கில் செடியைப் பொரும்பாலும் காடுகளில் தான் பார்ப்போம். ஆனால் இப்போது அந்த மூங்கில் செடி நம் வீட்டை அலங்கரிக்கவும் பயன்படுகிறது. தற்போது மூங்கில் செடி இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது.

அப்படி இருக்கும் அந்த மூங்கில் செடியை ஒரு கண்ணாடி பௌலில் வளர்ப்பார்கள். ஏனென்றால் இதை வீட்டில் வைத்தால் அதிர்க்ஷ்டம் என்று நினைப்பதால் தான். இந்த மூங்கில் செடியை ஒருவருக்கு பரிசாகக் கொடுத்தால், இதைப் பெறுபவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவர். ஏனெனில் இதை வாங்கிக் கொண்டால் அவர்களுக்கு இனிமேல் எங்கும், எதிலும் வெற்றி என்பதால். இப்படிப்பட்ட இந்த அதிர்க்ஷ்ட செடியை எப்படி பாதுகாப்பாக வளர்க்கலாம் என்று பார்ப்போமா!!!

மூங்கில் செடியை எப்படி பாதுகாக்கலாம்?

மூங்கில் செடிக்கு முக்கியமே தண்ணீர் தான்.

மூங்கில் செடி ஈரப்பதமான சூழலில் நன்கு செழிப்போடு, அதிலும் களிமண்ணில் வளரும். அப்படி களிமண்ணில் மூங்கில் செடியை வைக்கும் முன், தண்ணீரை முன்பே ஊற்றி வைத்துவிட வேண்டும். ஏனென்றால் களிமண் போதிய நீரை மட்டுமே உறிஞ்சும். அப்படி அந்த மண்ணில் செடியை வைத்தப் பின் சுற்றி செங்கற்களை வைக்க வேண்டும். இதனால் நீரானது வெளியில் செல்லாமல் மூங்கில் வளர்வதற்கு ஏற்றவாறு இருக்கும். வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் மூங்கில் செடியை சாப்பிடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் டாக்ஸிக் ஆசிட் இருக்கிறது, இது விஷதன்மை வாய்ந்தது. இதனால் செல்லப்பிராணிகளை அதற்கு எட்டும் வகையில் வைக்காதீர்கள்.

மூங்கில் செடியை எப்போதும் தண்ணீரிலேயே வையுங்கள். தினமும் அதற்கு தண்ணீர் மாற்றுங்கள். தண்ணீரானது மூங்கிலின் அடியிலிருந்து 1 இன்ச் மேல் வரை இருக்க வேண்டும். சிறிய மூங்கில் செடியாய் இருந்தால் நேரடியாக சூரிய ஒளியானது செடியில் படாமல் வைத்திருக்க வேண்டும். அதுவே அதன் வளர்ச்சிக்கு நல்லது. மூங்கில் செடி ஒரு அடிக்கு மேல் வளர்ந்திருந்தால், அப்போது தினமும் அதன் மேல் 30 45 நிமிடம் சூரிய ஒளி படுமாறு வைக்கலாம். மேலும் மாதத்திற்கு ஒரு முறை உரம் போட வேண்டும். ஏனென்றால் அது எப்போதும் நீரில் இருப்பதால் அதை பாக்டீரியா தாக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மறக்காமல் உரம் போட வேண்டும். சில சமயங்களில் மூங்கில் இலையானது மஞ்சள் நிறத்தில் மாறும். அப்படி அது மாறுகிறதென்றால், அது அளவுக்கு அதிகமாக சூரிய ஒளியில் இருப்பதாலும், தண்ணீர் சுத்தமாக இல்லாததாலுமே அதன் நிறம் மாறுகிறது. ஆகவே கவனமாக பார்த்துக் கொள்ளவும். மேற்சொன்னவாறு பின்பற்றி பாருங்கள், மூங்கில் செடி நன்கு செழிப்போடு நீண்ட நாட்கள் இருக்கும்

Leave a Reply