நித்திய கல்யாணி

நீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும் குணம் கொண்டது. அதனால்தான் நித்தியமும்(தினமும்) பூத்துக்குலுங்கும் கல்யாணி(திருமணப் பெண்) என்று இதன் பெயர் அமைந்தது.வெண்மை நிறத்தோடும், ரோஜா பூ நிறத்ேதாடும் விளையும் ஒரு குறுஞ்செடிதான் இந்த நித்திய கல்யாணி. இது பெரும்பாலும் இடுகாட்டில் (சுடுகாட்டில்) காணப்பெறுவதால் இதற்கு இடுகாட்டுமல்லி என்று பெயரிட்டு அழைப்பர்.இன்றைக்கு நவீன மருத்துவர்களால் ரேடியேஷன் என்ற பெயரில் சுட்டுப் போட்டும், சர்ஜரி என்ற பெயரில் வெட்டிப் போட்டும் தீர்க்க இயலாத புற்றுநோய்க்கு நித்திய கல்யாணி ஓர் உன்னதமான மருந்து.ஓர் இடம் விட்டு இன்னொரு இடத்துக்குப் பற்றிப்பரவிச் செல்வது புற்றுநோயின் சிறப்பம்சம் ஆகும். மேலும் உடல் உறுப்புகளைப் பாதிப்பதோடு தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தருவது புற்றுநோய்.
T-cells attacking cancer cell illustration of microscopic photos
இன்றைக்கும் இதன் வலியைத் தணிக்க மருத்துவம் கண்டபாடில்லை. போதை மருந்துகளே பல இடங்களில் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட கொடிய நோயைப் போக்கும் தன்மையுடையது நித்திய கல்யாணி.ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயை வேரறுக்கக் கூடியது இம்மூலிகை.நித்திய கல்யாணியை ‘குப்பை வேளை’ என்றும் அழைப்பது வழக்கம். Catharanthes roseus என்பது இதன் தாவரப்பெயர் ஆகும். மேற்கிந்திய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட நித்திய கல்யாணி ஆங்கிலத்தில் Madagascar periwinkle என்று அழைக்கப்படுகிறது. ‘சதம் புஷ்பா’ என்பது இதன் வடமொழிப் பெயராகும்.
நூற்றுக்கும் மேலான மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது நித்திய கல்யாணி. இதில் உள்ள Vincamine எனும் வேதிப்பொருள் ரத்த நாளங்களைத் தளர்த்தும் வல்லமை உடையது. இதனால் குருதி அடைத்தல், மார்பக நோய்கள், இதயம் தொடர்பான நோய்கள் தவிர்க்கப் பெறுகின்றன.

அனைத்துக்கும் மேலாக நித்திய கல்யாணியில் செரிந்து விளங்கும் Vinblastine மற்றும் Vincristine ஆகிய வேதிப்பொருட்கள் புற்றுநோயைப் போக்கத்தக்க வலிமையுள்ள மருந்தாக விளங்குகிறது. ரத்தத் தட்டணுக்கள் குறைபாட்டைப் போக்குவதற்கு ‘வின்கிரிஸ்டின்’, ‘வின்ப்ளேஸ்ட்டின்’ ஆகிய வேதிப்பொருட்கள் மருந்தாகிப் பயன் தருகின்றன. ரத்த சிவப்பணுக்களின் சிதைவினை தடுத்து உயிர் காக்கும் மருந்தாகவும் இது விளங்குகிறது.விதைப்பையில் ஏற்படும் புற்று, சிறுநீர்ப்பையில் ஏற்படும் புற்று, மார்பகப்புற்று, நுரையீரல் புற்று மற்றும் ‘லிம்ப்போசைட்ஸ்’ எனும் ரத்த வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் செல்கள் ஆகியவற்றுக்கும் இந்த வேதிப்பொருட்கள் மருந்தாகின்றன. நித்திய கல்யாணியில்இருந்து பெறப்படும் ‘வின்கிரிஸ்டின்’ பல கூட்டு மருந்துகளோடு ‘லுக்கேமியா’ எனும் ரத்தப்புற்று நோய்க்கும், குழந்தைகளைப் பாதிக்கும் புற்றுக்கட்டிகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நித்திய கல்யாணியின் மருத்துவப் பயன்கள்:
*வரலாற்றுக் காலந்தொட்டு நித்திய கல்யாணியைப் பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் இதை சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
*இந்தியாவில் இதன் இலைச்சாற்றை எடுத்து வண்டு கடிகளுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்துவது உண்டு.

*ஹவாய் தீவு மக்கள் நித்திய கல்யாணி இலையினை வதக்கி பசையாகச் செய்து ரத்தக் கசிவை நிறுத்தப் பயன்படுத்துவர். சீன மக்கள் இதை வற்றச் செய்யும் மருந்தாகவும், நீர்ப்பெருக்கியாகவும் இருமல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

*மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் நித்திய கல்யாணியை நுரையீரல் தொற்றுக்கும் சளிக்கும் மருந்தாகப் பயன்படுத்துவர்.

*கியூபா, போர்ட்டோரிக்கா, ஜமைக்கா போன்ற தீவுகளில் நித்திய கல்யாணியிலிருந்து கண் தொற்று நோயைப் போக்குவதற்காகவும், கண்களில் ஏற்படும் எரிச்சலைத் தணிப்பதற்காகவும் குறிப்பாகப்பச்சிளங் குழந்தைகளின் கண் நோய்களுக்கும் மருந்துகள் செய்து பயன்படுத்துகின்றனர்.

*நித்திய கல்யாணியை ஆப்பிரிக்க நாடுகளில் அதிக மாதவிலக்குப் போக்கு மற்றும் முடக்குவாதம் ஆகிய நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்துகின்றனர்.

*பஹாமியர்கள் நித்திய கல்யாணி பூக்களை ஆஸ்துமா நோய்க்குப் பயன்படுத்துகின்றனர். மொரீஷிய மக்கள் நித்திய கல்யாணி இலையைப் பசியின்மைக்கும், செரிமானமின்மைக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply