வெங்காயத்தை வீட்டிலேயே வளர்ப்பது எப்படி?

தற்போது வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், பலரது வீடுகளில் வெங்காயத்தின் உபயோகமே குறைந்துவிட்டது. ஆனால் வெங்காயத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதால், அவற்றை சாப்பிடாமல் இருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, சமைக்க வேண்டுமானால், அதற்கு கட்டாயம் வெங்காயம் அவசியம்.

இதன் காரணமாக பலரும் வீட்டிலேயே வெங்காயத்தை வளர்த்தால் என்னவென்று தோன்றும். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயம் வளர்ப்பதற்கு தோட்டம் அவசியம் என்பதில்லை. கண்டைனர் தோட்டத்தில் கூட வெங்காயத்தை வளர்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? கண்டைனரில் வெங்காயத்தை வளர்ப்பதால் அவற்றை வீட்டிற்குள் அல்லது வீட்டின் பின்புறத்தில் சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம்.

கண்டைனரில் வெங்காயத்தை வளர்ப்பது எப்படி? வெங்காயத்தை கண்டைனரில் வளர்ப்பது என்பது கிட்டத்தட்ட வெங்காயத்தை பூமியில் வளர்ப்பது போல தான். நல்ல மண், போதிய வடிகால், நல்ல உரம் மற்றும் அதிகப்படியான வெளிச்சமே இதற்கு தேவையானது. அடிப்படை வெங்காய பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Image result for small onion pot garden

 

கண்டைனர் உண்மையில் சொல்ல வேண்டுமானால், வெங்காயத்தை பூமியில் வளர்ப்பதற்கும், தொட்டியில் வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றால், என்ன கண்டைனரை நீங்கள் தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்பதில் தான் உள்ளது. நல்ல அறுவடை செய்ய பல வெங்காய செடிகளை நட்டு வைக்க வேண்டி வரும். ஆனால் 5-6 இன்ச் தொட்டியில் இதை செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும். ஒருவேளை, வெங்காயத்தை தொட்டியில் வளர்க்க முடிவு செய்தீர்கள் என்றால், பெரிய வாயை கொண்ட தொட்டியை தேர்ந்தெடுக்கவும். குறைந்தது 10 இன்ச் ஆழமாவது இருக்க வேண்டும். ஆனால் பல அடி அகலமாக இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல அறுவடையை ஈட்டிட போதிய செடிகளை நட்டு வைக்க முடியும்.

மண் அல்லது பிளாஸ்டிக் தொட்டி பல பேர் பெரிய தொட்டியில் வெங்காயத்தை வெற்றிகரமாக வளர்த்து வருகின்றனர். பெரிய அளவிலான மண் தொட்டிகளை விட பிளாஸ்டிக் தொட்டிகள் மலிவானதால், சிக்கனமாகவும் சிறப்பாகவும் அதில் வெங்காயத்தை வளர்க்கலாம். வடிகால் அமைத்திட தொட்டியின் அடியில் ஓட்டை ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

Image result for small onion garden

வாளி 19 லிட்டர் வாளியிலும் கூட வெங்காயத்தை வளர்க்கலாம். ஆனால் ஒரு வாளியில் 3 அல்லது 4 வெங்காயங்களை மட்டுமே வளர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் வெங்காயத்தைச் சுற்றி குறைந்து 3 இன்ச் திறந்த மண் இருந்தால் தான் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும்

கண்டைனரில் வெங்காயம் வளர்க்க இடத்தை தேர்ந்தெடுத்தல் வெங்காயத்தை வாளி அல்லது தொட்டியில் என எதில் வளர்த்தாலும், வெங்காய கண்டைனரில் 6 முதல் 7 மணி நேரம் சூரிய வெளிச்சம் படும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிற்குள் வெங்காயத்தை வளர்த்து, அந்த இடத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், வெங்காயத்தில் படும் படி, ஒளிரும் விளக்குகளை அமைத்திடவும்.

தொட்டியில் வளரும் வெங்காயத்திற்கு தண்ணீர் ஊற்ற மறக்காதீர்கள் கண்டைனரில் வெங்காயத்தை வளர்க்க வேண்டுமானால், அதற்கு தண்ணீர் அத்தியாவசியமானது. கண்டைனரில் வளரும் வெங்காயத்திற்கு வாரத்திற்கு குறைந்தது 2-3 இன்ச் அளவிலாவது தண்ணீர் தேவைப்படும். கோடைக் காலம் என்றால் இன்னும் அதிகமாக தேவைப்படும். உங்கள் வெங்காய செடிகளை தினமும் சோதிக்கவும். அதன் மண் காய்ந்து போனால் உடனே தண்ணீர் ஊற்றுங்கள். குறைந்த இடமே உள்ளது என்பதால் வளர்ச்சியின் அளவும் குறையும் என்பதில்லை. வீட்டிற்குள் வெங்காயத்தை வளர்த்தல் அல்லது டப்பில் வெங்காயத்தை வளர்ப்பது சுலபமாகவும் இருக்கும், சந்தோஷமாகவும் இருக்கும். கண்டைனர் தோட்டத்தில் வெங்காயத்தை எப்படி வளர்க்க வேண்டும் என தெரிந்து விட்டதல்லவா? இனியும் உங்களுக்கு அதனை தவிர்க்க காரணம் கூற முடியாது.

Tamil-boldsky

Leave a Reply