வீட்டினுள் சுற்றும் அசுத்தக் காற்றை சுத்தப்படுத்தும் உள் அலங்கார செடிகள்

தற்போது மாசடைந்த சுற்றுச்சூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பதே அரிதான ஒன்றாகிவிட்டது. இத்தகைய நிலை வெளியிடங்களில் மட்டுமின்றி, வீட்டினுள் கூட உள்ளது என்பது தான் ஒரு ஹைலைட். இதன் காரணமாக பல்வேறு நுரையீரல் பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுதிணறல், நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.

ஆனால் வீட்டினுள் ஒருசில செடிகளை வளர்த்து வந்தால், வீடு அழகாக காட்டியளிப்பதோடு, சுத்தமான காற்றையும் சுவாசித்தவாறு இருக்கும். எனவே வீட்டில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் கீழ்கூறிய செடிகளை வைத்து அலங்கரித்து, நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்களேன்.

மூங்கில் செடி
உங்கள் வீட்டை சுற்றிய காற்று மண்டலத்தில் சுற்றித் திரியும் அனைத்து வகையான ரசாயனங்களையும் நீக்க, மூங்கில் பனை செடி சிறந்ததாக விளங்கும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம் அதிகமாக தேவைப்படாது. அதனால் அதனை நிழலாக இருக்கும் வீட்டு பகுதியிலேயே வளர்க்கலாம். அது கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஃபார்மல்டீஹைடு, ஸைலீன், க்ளோரோஃபார்ம் மற்றும் ஏராளமானவற்றை நீக்கும். அதனால் துணி துவைக்கும் அறை, ஹால் அல்லது படுக்கையறையில் வைப்பதற்கு உகந்த செடியாகும் இது.

ரப்பர் செடி
இந்தியாவில் ரப்பர் செடிகள் மிகவும் பொதுவான ஒன்று. அவைகள் ஆரோக்கியமாக இருக்க, அவைகளுக்கு அடர்த்தியான ஒளி, தண்ணீர் மற்றும் உரம் அதிகமான அளவில் தேவைப்படும். கார்பன் மோனாக்சைடு, ஃபார்மல்டீஹைடு மற்றும் ட்ரைகுளோரோ ஈத்தலைன் போன்றவற்றை நீக்க இது சிறந்த தேர்வாகும்.

பாக்கு பனை (Areca Palm)
பாக்கு பனை கூட மூங்கில் பனையை போன்றதாகும். வில் வளைவுகளைப் போன்ற இலைகளை கொண்டுள்ள இந்த செடி, பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையிலும் அழகாகவும் காட்சியளிக்கும். காற்றில் ஈரப்பதத்தை கொண்டு வரவும் பென்சீன், கார்பன் மோனாக்சைடு, ஸைலீன், ட்ரைகுளோரோ ஈத்தலைன் மற்றும் ஃபார்மல்டீஹைடு ஆகியவற்றை நீக்கவும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

சாமந்திப்பூ செடி
அழகிய சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.

பாம்பு செடி
பாம்பு செடியை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள காற்றினில் கலந்திருக்கும் நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால்டிஹைடு போன்றவற்றை உறிஞ்சி, சுத்தமான காற்றினை அளிக்கும்.

 

வீட்டை அழகுபடுத்தும் அம்சங்களில் உள் அலங்கார செடிகளும் தங்களை இணைத்து கொண்டிருக்கின்றன. அவை அறைக்கு அழகு சேர்க்கும் பங்களிப்பை  அளிப்பதோடு நம் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கின்றன. வீட்டுக்குள் நுழையும் காற்றை தூய்மையானதாக மாற்றும் வேலையையும் செடிகள் செய்து வருகின்றன.

அலங்கார செடிகள்

நகரமயமாதல் காரணமாக சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது கேள்விக்குறியாகி வருகிறது. வெளியிடங்களில் மட்டுமின்றி வீட்டுக்குள் உட்புகும் காற்றிலும் மாசு கலக்கும் நிலை உருவாகி வருகிறது. சாலைகள், தெரு பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது அதற்கு முக்கிய காரணமாகிறது. அதனால் பலரும் வீடுகளில் செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

அழகுக்காக மட்டுமே செடிகள் வளர்த்து வந்த நிலை மாறி தங்கள் தேவைகளுக்காக செடிகளின் பயன்பாட்டை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்டு  சொல்லும்படியாக மாடித்தோட்டம் அமைப்பது அதிகரித்து வருகிறது. மரங்களுக்கு இணையாக அனைத்து செடிகளும் சுத்தமான காற்றை வழங்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒருசில செடிகள் வீட்டின் அழகியலில் பங்கெடுப்பதோடு சுத்தமான காற்றையும் வழங்குகின்றன. அந்த செடிகள் குறித்து பார்ப்போம்.

காற்றை சுத்திகரிக்கும்

வீட்டின் உள் அலங்காரத்தில் மூங்கில் செடிகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சிலர் வாஸ்து காரணங்   களுக்காக மூங்கில் செடிகளை அறையில் இடம்பெற செய்கிறார்கள். பச்சை பசேல் என சிறிய இலைகளுடன் காட்சி யளிக்கும் மூங்கில் செடிகள் சுத்தமான காற்றையும் தருகின்றன. இவை காற்றில் கலக்கும் ரசாயனங்களை நீக்கும் வல்லமை படைத்தவை.

அதனால் காற்றை சுத்தப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த செடி வளர்வதற்கு அதிக சூரிய வெளிச்சம் தேவைப்படாது. அதனால் வீட்டின் எந்த அறையிலும் வளர்வதற்கு ஏற்றவை. எனினும் வரவேற்பறை, படுக்கை அறையில் மூங்கில் செடிகளை வளர்ப்பது பலன் கொடுக்கும். நாம் அதிகமாக புழங்கும் இடங்களில்  வளர்க்கும்போது தூய்மையான காற்றை சுவாசிக்க உதவும்.

சாமந்திப்பூ செடி

தோட்டங்களில் அதிகமாக வளர்க்கப்படும் சாமந்திப்பூ செடியும் தற்போது வீட்டை அலங்கரிக்கும் செடியாக மாறி இருக்கிறது. பூஜைக்கு தேவையான பூக்களுக்காக சாமந்திப்பூ செடிகளை வளர்க்கிறார்கள். இந்த செடி காற்றில் கலக்கும் அமோனியாவை நீக்கும் திறன் படைத்தது. இதனை வீட்டின் வாசல் பகுதியிலோ அல்லது  வீட்டின் உள் பகுதியிலோ வளர்க்கலாம்.

எனினும் சூரிய ஒளி அதிகமாக செடியின் மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த செடியை அதிக அளவில் வளர்ப்பதன் மூலம் வீட்டுக்குள் சுத்தமான  காற்றை வரவழைக்க முடியும்.

குளுமை சூழல்

பாக்கு பனை செடிக்கும் காற்றில் கலந்திருக்கும் மாசுக்களை நீக்கும் தன்மை இருக்கிறது. குறிப்பாக கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஈத்தலைன், பார்மல்டீஹைடு  போன்றவற்றை நீக்கி சுத்தமான காற்றை வழங்கும். இதனை வீட்டின் முகப்பு பகுதியில் வளர்க்கலாம். வீட்டுக்கு அழகிய தோற்றம் கிடைக்கும். இதன் இலைகள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அழகுற காட்சி அளிக்கும்.

இந்த மரம் வீட்டுக்குள் குளுமையான சூழல் நிலவவும் வழிவகை செய்யும். அதாவது காற்றில் ஈரப்பதத்தை ஈர்த்து வரும் தன்மை கொண்டது. வீட்டுக்குள் சுத்தமான காற்றையும், ஈரப்     பதமான சூழலையும் கொண்டுவரும் இந்த செடியை வளர்ப்பது இரட்டிப்பு பலன் கொடுக்கும்.

Leave a Reply