விவசாயி மாட்டை நம்பி விவசாயம்

விவசாயி மாட்டை நம்பி விவசாயம் செய்தவரை ஊருக்கு சோறு போட்டான்…
நவீனம்ங்கிற பேர்ல உழுவுக்கு டிராக்டரை நம்பினான்… 
மாடு இருந்தவரை… 

மாட்டுக்கு புல்லை போட்டான்… 

எருவை கொடுத்திச்சு…
டிராக்டருக்கு டீசல் போட்டான்…
டிராக்டர் புகையைதான் பரிசா கொடுத்திச்சு…
எருவுக்கு என்ன பண்ண?…

யூரியாவும், பொட்டாஷும் போட்டான்…
இது அத்தோடயா முடிஞ்சுது… 
மாட்டுக்கு தேவை குறைஞ்சது…

மாடு வளர்ப்பு அனாவசிய செலவு ஆச்சு…
உழவுக்கு வழியில்லைன்னு ஆகிப்போன காளைக்கன்றை என்ன பண்ண?…

கறிக்கு கொடுத்தான்..
ஏன்?..
மாட்டை வச்சு உழுதவரை… புல்லும், எருவும் இலவசமா கிடைச்சது..
டிராக்டர் வந்திச்சு…. ரெண்டும் போச்சு… டீசலும் காசு… உரமும் காசு… 
நஷ்டத்தை ஈடுகட்ட வழி… அனாவசிய செலவான காளைக்கன்றை வளர்ப்பதை விட விற்பது நல்லதுன்னு முடிவுக்கு வந்தான்…
அதோடவா முடிஞ்சது… 
உயிர் சுத்திரிப்புன்னு சொல்லுற அக்கினி நட்சத்திர காலத்துலயும்… 
டிராக்டர் டீசலை குடிச்சிட்டு… புகையைதான் தள்ளுச்சு…
காய்ந்த புல்லைத்திண்ண மாடு இல்லை… அப்புறமென்ன அதை மனுசனா திண்ண முடியும்…
இருக்கிற வெப்பம் போதாதுன்னு… அக்கினி வெயில்ல வயலோட கரையில் நெருப்பை வச்சு மண்ணை பொசுக்கினான்…
அந்த நெருப்பு சூரியனை சுடாதுதான்… ஆனால்.. பூமிக்குள்ள இருக்கும் மண்புழுவை சுடுமே… அது இன்னும் ஆழமா உள்ளுக்குள்ள போயிடுச்சு…
சரி… மண்புழு போனால்… மயிரு போச்சு…

 

நெருப்பால செத்துப்போன மண்ணுன்னு… மேல் மண்ணு… மலடா போச்சு… ஆழமா போன மண்புழு ஆவணி மாசம் மேலே வந்தால்… யூரியா போட்டு… அதையும் கொன்னோம்…
நான் உனக்கென்ன துரோகம் பண்ணேன்னு கேட்க அறியாத அந்த ஜீவன் என்ன பண்ணும்… இன்னிக்கு நான் நாளைக்கு நீன்னு சாபம் விட்டு போய் சேந்துடுச்சு…
மலடா போன மண்ணுல விதையை போட்டு உரத்தையும் போட்டு… ஓரமா குத்தவச்சு உட்கார்ந்து விதையை பார்த்தா… விதை முளையே விடல…

அய்யோன்னு பதறிப்போய் நிமிர்ந்து பார்த்தா… மலட்டு மண்ணுல… உரத்தை மட்டுமே திண்ணு உயிர்வாழும் விதைன்னு நீட்டினான்…
ஆஹான்னு வாயை பொளந்துக்கிட்டு வாங்கிப்போட்டு… உரத்தை போட்டு… ஒப்பேத்திட்டு இருந்தோம்… அப்படியே… 

ஒப்பேத்தின காலத்துல… என்ன நடந்திச்சுன்னு திரும்பி பார்த்தா… 
ஆடியில பட்டம் கட்டி… ஆறு மாச வளர்ப்புல தை-யில அறுவடை முடிக்க வச்சிருந்த நெல்லையே காணாம்…
போகட்டும்… எருமை இல்லாத இடத்துல இந்த நெல்லு இருந்து மட்டும் என்ன பண்ணன்னு மனச தேத்திக்கிட்டு… பார்த்தா… உரத்துக்கு விலை கூடிடுச்சுங்கிறான்… உரம் கிடைக்கலைங்கிறான்…. 
போடா மயிறேன்னு… எருங்கிற பேர்ல கொஞ்சம் சாத்திரத்துக்கு மாட்டுச்சாணி உள்ள… என்னத்தையோ… கொண்டு வந்து கொட்டினா… அந்த கருமம் மண்ணுலையே ஒட்ட மாட்டுது…
இதென்னடா குடியானவனுக்கு வந்த சோதனன்னு ஒண்ணுக்கு நாலா உழவு ஓட்டி மண்ணுல ஒட்டவச்சு… விதையை விதைச்சா… ஏற்கனவே… கம்பெனிக்காரன் கொடுத்த உரத்தோட சத்துல… முளைவிட்ட பயிர் அதுக்குமேல வரவேயில்ல… மறுபடியும் போய்… உரத்தை வாங்கி வந்து போட்டு… விளைய வச்சு… விளைச்சலை எடுத்து கணக்கு பார்த்தால்… விதை நெல் + உழவு கூலி + உரம்னு… எல்லாம்  கழிச்சி நெல்லை அளந்து போட்டு… மிச்சம்னு பார்த்தா… ஒன்னுமில்ல… 
ஊருக்கு சோறு போட்ட வம்சம் சோத்துக்கு பிச்சையா எடுக்க முடியும்…
மானஸ்தன்… 

எம்புட்டுதான் கடன்பட்டு விளைய வைப்பான்… 
இதுக்கு மேல கடன்பட ஏதுமில்லன்னு ஆகும் போது… 
வேற வழி… 
மாட்டை நம்பி விவசாயம் பண்ணி ஊருக்கு சோறு போட்டவன்…
மாட்டை அழிச்சிட்டு விவசாயம் பண்ணி… தூக்குப் போட்டான்…
மண்புழுவோட சாபம்தான்… 

தனக்கு பலிக்குதுன்னு தெரியாமலேயே…
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…
என் மக்களே…பகிருங்கள்

Leave a Reply