வியக்க வைக்கும் மண்ணில்லா விவசாயம்

விளை நிலங்களின் அளவு பெருமளவு குறைந்து வரும் சூழலில் அதற்கு மாற்று சூழல் கண்டறிய வேண்டிய நிலை உள்ளது.
விளைநிலங்கள் மிக குறைந்து அளவு உள்ள தென்கொரியா போன்ற நாடுகளில் மண் வளம் இல்லாத இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் இப்போது செழிப்பாக விவசாயம் நடைபெற்று வருகிறது.

 

மண் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும் என்பது வியப்பாக தான் இருக்கிறது. ஆனால் மண் இல்லாமல், அதற்கு மாற்றாக தேங்காய் நார் கழிவு, மரத்தூள், சிறிய கற்கள் என்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்த முறையில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து பயிர்களையும் வெற்றிகரமாக விவசாயம் செய்கின்றனர்.

 

இந்தியாவில் பாரம்பரியமாக மண்ணில் மட்டுமே சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் தற்போது விளை நிலங்களின் பரப்பளவு குறைந்து வரும் சூழலில் மண்ணுக்கு மாற்றுப்பொருட்கள் தேவைப்படுகின்றன.
இந்த மாற்றுப்பொருட்களை பயன்படுத்தி சரியான முறையில் விவசாயம் செய்வது பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மண்ணுக்கு மாற்றாக, தென்னை நார்க்கழிவுகள், நெல் உமி, மரத்தூள் போன்ற ஊடகங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்வது எளிமையானது என்று வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

மண்ணுடன் தென்னை நார்க்கழிவு, க்ராவல், சைலக்ஸ் கற்கள் போன்றவற்றை கலந்து சாகுபடி செய்வதால் மண் தேவை பெருமளவு குறைகிறது. அதோடு, பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. உபயோகப்படுத்த முடியாத மண்ணிலும் இந்த முறையில் சாகுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.

 

இந்த முறையில் விவசாயம் செய்யும்பொழுது, தட்வெட்பநிலையும், தண்ணீரும் சீராக இருக்க வேண்டும். இதற்கு பசுமைக்குடில் அமைத்துக்கொள்வது அவசியம். இதன் மூலம் மண்ணுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் தென்னை நார் கழிவு, மரத்தூள் போன்வற்றில் ஈரப்பதம் சீராக இருக்க உதவும்.

 

பசுமைக் கூடாரத்திற்குள் மண்ணுடன், மற்றப்பொருட்களையும் வெவ்வேறு விகிதத்தில் கலந்து, வைக்க வேண்டும். விதைக்கும் பயிருக்கு ஏற்ற அளவில் தொட்டிகளும், பைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூடாரத்திற்குள்ளேயே சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாசனமும் செய்யப்படுகிறது.

இவ்வாறு விவசாயம் செய்யும்பொழுது, பூச்சி தாக்குதலுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும். அதோடு நீர் மற்றும் உரத்தேவையும் குறைகிறது.

 

விளைநிலங்கள் வெகு விரைவாகக் குறைந்து கொண்டே வருகின்றன. தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சூழலில் மண்ணில்லாமல் பயிர் சாகுபடி செய்யும் இந்த ஆராய்ச்சியின் மூலம் சென்னை போன்ற பெரு நகரங்களின் கட்டடங்களின் மேல் தளத்திலும் கூட விவசாயம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை

Leave a Reply