தென்னை மருத்துவம்

தென்னை மருத்துவம் என்றால் புதுமையாக உள்ளது அல்லவா?

அக்காலம் முதல் இன்று வரை கிராமப்புறங்களில் தென்னை வேர் முதல் பூக்கள் வரை உபயோகித்து ஏராளமான நோய்களை குணப்படுத்தியுள்ளனர்.
1. தென்னம்பூ: பெண்களுக்கு வரும் உதிரப்பாடு, அல்லது பெரும்பாட்டு நோய்களுக்கு இது நல்ல மருந்து. தென்னம்பூ விரிந்த அன்று எடுத்து (5 கதிர்) அரிசியை எடுத்து நன்கு அரைத்து, ஒரு எலுமிச்சை பழ அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க நோய் குணமாகும்.
2. இளநீர்: நீர்க்கடுப்பு நோய்க்கு கருக்கு இளநீர் அருமருந்து ஆகும். மூலக்கடுப்பை கட்டுப்படுத்தும். சிறுநீர் கல் கடுப்புக்கு நல்ல மருந்தாகும்.
3. தென்னங்கள்: இதைக்குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடம்புக்கு கள் நல்ல பானமாகும்.
4. தேங்காய் பால்: தேன் வண்டு, அட்டை, பூரான் போன்ற விஷக்கடிகளுக்கு நல்ல மருந்து ஆகும். சிறு குழந்தைகளுக்க மூக்கில் நீர் வடிந்து மூக்கு துவாரத்தின் முன் வேர்க்குரு இருந்து புண்ணாகி இருந்தால் தேங்காய்ப்பாலை ஒத்தி எடுக்க குணமாகும். தேங்காய் பால் நல்ல ஆரோக்கியம் தரும் ஒரு பானமாகும்.
5. தென்னை மர பஞ்சு: ஓலை மட்டைகளின் இரு ஓரங்களிலும் மூட்டு அல்லது அடி, மட்டையை ஒட்டி காணப்படும் ஒரு வகை பூஞ்சானம் போன்ற பொருளே இது ஆகும். இது வெட்டுக்காய மருந்தாகும். ரத்தக்கசிவை நிறுத்தும்.
6. சிரட்டை: சிரட்டை தைலம் பயன்படுத்தினால் கை, கால்களில் வரும் எக்ஸிமா பற்றுகள், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
7. தென்னங்குருத்து: இது உதர மூலத்தை தனித்து போக்கும். வலியை போக்கும்.
8. தேங்காய் நெய்: சிரங்கு, தீப்புண், படர்தாமரை, பல்நோய், தலைமயிர் வளர்தல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது.
9. தேங்காய்நார்: தென்னை நார், பாக் இரண்டையும் எரித்து சாம்பல் எடுத்து, சம அளவில் தேனில் கலந்து 2 அல்லது 4 முறை அருந்தினால் வாந்தி பேதி நிற்கும். நாரை எரித்து, கற்கண்டு சேர்த்து இளநீரில் கலக்கி ரத்தப்போக்கு அதிகமுள்ள இளம் பெண்களுக்கு கொடுத்தால் உடன் ரத்தப்போக்கு நிற்கும். நார் சாம்பலை ரத்தக்காயம் பட்ட இடத்தில் வைத்து பூசினால் ரத்தம் கசிவதைத் தடுக்கலாம்.
தென்னை மர பொருட்கள் மரம், மட்டை உட்பட அனைத்தும் மனிதனுக்குப் பயன்படுத்துவதுபோல் அதன் வேர் முதல் பூக்கள் வரை மனிதனுக்கு மருந்தாய் பயன்படுகின்றன. எனவே தென்னம்பிள்ளையை பிள்ளை போல் பேணிக்காப்போம்.
எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்
97503 33829.

Leave a Reply