கடுகு செடி

கடுகு செடி பற்றிய புதியதொரு கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடுகு செடியில் பூச்சிகள் ஏதாவது அவற்றை உண்பதற்கு முயற்சித்தால் ஒலி அலைகளைக் கொண்டு எதிரிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கு இரசாயனத் திரவத்தைச் சுரப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மிசோரி பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெட்டுக்கிளிகள் கடுகு செடியின் இலைகளை உண்பதற்கு முயற்சிக்கும் போது தன்னிடம் காணப்படும் விசேட இரசானயத் திரவத்தை சுரப்பதன் மூலம் அவற்றிடமிருந்து பாதுகாத்துக் கொள்கிறது.
மரத்தில் ஏற்படும் சிறிய அதிர்ச்சி அல்லது ஒலியை அறிந்துகொண்டு அதற்கு மாற்றாக கடுகு செடி செயற்படுகிறது. எனினும் இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்கிறார் மிசோரி பல்கலைக்கழக ஆய்வாளர் ஹெய்டி அபெல்.
மரத்தில் ஏற்படுகின்ற மாற்றம் லேசர் ஒளியைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடுகு செடியின் இலை பூச்சிகளால் கடிக்கப்படும்போது அதற்கு மாறான மாற்றங்கள் இலைகளில் ஏற்படுகிறது என்கிறார் அவர்.
அதேநேரம் தனக்கு ஆபத்தில்லாத பூச்சிகளால் ஏற்படுத்தப்படும் அதிர்வுகளை கடுகு செடி தவிர்த்து விடுவதாகவும் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பூச்சிகளுக்கு எதிரான செயற்பாடுகளை வெளிக்காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
– See more at: http://athavanit.com/?p=59503#sthash.QhSJlJyy.dpuf

Leave a Reply