இக்சோரா -இட்லி பூ

இலக்கியப் பெயர் வெட்சி மலர் அல்லது வெட்சிப் பூ. வெண்ணிற வெட்சி, செந்நிற வெட்சி என இரண்டுவகை உண்டு.

இக்சோரா பூக்கள் வீட்டுத் தோட்டங்களின் கட்டாய தாவரங்கள் பட்டியலில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. அலங்காரத் தேவைக்காக இதன் பல வகை வர்ணப்பூக்கள் பயன்படுகின்றன. ஒரு தேர்ந்த வீட்டுத் தோட்டத்தின்  அடிப்படை தகுதிகளில் இவ்விக்சோரா தாவாத்தின் அனைத்து வகைகளையும் கொண்டிருத்தல் ஒரு அம்சமாகும். இதன் பழங்களை சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்பது வழக்கம். மட்டுமல்லாது எக்சிமா போன்ற தோல் நோய்களுக்கும் (Eczema) இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறிய தாவரங்கலின் மருத்துவக் குணங்கள் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும், காலாகாலமாக மக்கள் இவற்றை தமது அன்றாட வாழ்வில்ந ம்பிக்கையுடன் பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் எமது அன்றாட வாழ்வில் அதிகம் காணமுடியாத இனங்களாக இவை மாறிவரும் நிலையில் அழகுக்காகவேனும் ஏன் பயன்படுத்தக் கூடாது?

-Roar tamil

இலக்கிய மலர்

பண்டைத் தமிழர்கள் பல்வேறு குழுக்களாக (நாடுகளாக) இருந்தனர். ஒரு நாட்டினரிடம் இருந்த ஆநிரைகளை கொள்ளையடிக்க,  மற்ற நாட்டினர் தொடுத்த போர் வெட்சிப் போர் எனப்பட்டது. அப்போது வீரர்கள் அடையாளமாக  வெட்சிப் பூவை அணிந்தனர். இலக்கண நூல்கள் ”வெட்சித் திணை” என உரைத்தன.

தமிழ் இலக்கியத்தில் மலர்கள் என்றாலே கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டுதான் நினைவிற்கு வரும். ஆரிய மன்னன் பிரகத்தத்தன் என்பவனுக்கு தமிழைப் பற்றிச் சொல்லும்போது,  அந்த பாட்டில் கபிலர் பல்வேறு மலர்களைப் பற்றி சொல்லுகிறார். வெட்சிப் பூவை 63 ஆவது வரியில் சொல்லுகிறார்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள், வெட்சிப் பூவைப் பற்றி வேட்டுவ வரியில் குறிப்பிடுகிறார்.

திருமுருகாற்றுப்படையில், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் “செங்கால் வெட்சி “ ( வரி எண்.21 ) என்று சிறப்பிக்கிறார்..இதன் பொருள்”சிவந்த கால்களை உடைய வெட்சி” என்பதாகும்.

குறுந்தொகை  209 ஆவது பாடலில் பாலை பாடிய பெருங்கடுங்கோ “ முடச்சினை வெட்சி “ (வளைந்த கிளைகளைக் கொண்ட வெட்சி) என்று விவரிக்கிறார்.

“  இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி “ என்று அகநானூறு (133) சொல்கிறது. 14-8.  ( சிவலின் ( சிவல் – ஒருவகைப் பறவை ) காலிலுள்ள முள்ளை ஒத்த,  அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள்) பாடலாசிரியர் உறையூர் மருத்துவன் தாமோதரனார்

ஏறு தழுவலின் போது வெட்சிப்பூவை வீரர்கள் சூடிக் கொண்டார்கள். அதனைப் பற்றிச் சொல்ல வந்த புலவர் ” புல்லிலை வெட்சி “ – என்றுகலித்தொகையில் (103) சிறப்பிக்கிறார். முல்லைக் கலி – ஆசிரியர்: சோழன் நல்லுத்திரன்

நன்றி:

Tiruchirapalli, Tamil Nadu, Indiaபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு

Leave a Reply