அவரை

பொதுவாக காய்கறி வகைகளில் ஒன்றான கொடி அவரைக்காய் பற்றித்தான் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்போம். கொடி அவரை பயிரிட்டால் தனியாக அதற்கென்று பந்தல் போட வேண்டும், செலவு அதிகமாகும், ஊடு பயிர் எதுவும் விளைவிக்க முடியாது. இதற்கு மாற்றாக விவசாயிகளின் செலவை குறைக்கவும், காய்கறி வகைகளில் அவரை விளைச்சலை அதிகரிக்கவும் இந்த முறை பயன்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் சுப்பிரமணி என்ற விவசாயியும் தங்களது விளைநிலங்களில் அரை ஏக்கர் மட்டும் பரிட்சாத்த முறையில் செடி அவரை பயிரிட்டுள்ளனர்.
செடி அவரை பயிரிட்டால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். அதிக உரம் போடத் தேவையில்லை. பூச்சியும் அதிகம் தாக்காது, நிலக்கடலை, தக்கைப்பூண்டு போன்று வேர்களின் மூலமாக தேவையான உரத்தை தானாகவே காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் எடுத்துக் கொள்ளும் குணமுடையது. பயிரிட்ட அறுபதாவது நாளிலேயே அவரைக் காய்கறிகளை பறிக்கத் தொடங்கி விடலாம்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கல்வித்துறை உதவி இயக்குநர் இளங்கோவன் கூறியது: செடி அவரை பயிரிட்டால் கொடி அவரையைப் போன்று பந்தல் அமைக்கத் தேவையில்லை. கிரை வகைகளையும், கொடி வகைக் காய்கறிகளான பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் கூட ஊடு பயிராக சேர்த்துப் பயிரிடலாம். ஆனால் கொடி அவரையில் ஊடுபயிர் எதுவும் விளைவிக்க வாய்ப்பில்லை.

Leave a Reply