ChinnaAdmin

 

தென்னம் பூ

தென்னையின் பூ வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் தென்னையின் பூ சிறுநீரை பெருக்கும். உடலின் வெப்பத்தை அகற்றும் தன்மை கொண்டது. மேலும் இது உடலை வலிமையுடையதாக்கும். இளம் தென்னங்குருத்தை தின்று வந்தால் சளி நீங்கும். இரத்த மூலம் தீரும். தென்னம் பூவை இடித்து சாறு பிழிந்து 150 மிலியுடன் அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, நீர்ச்சுருக்கு தீரும். தென்னம்பூ ஒரு பிடியை வாயிலிட்டு மென்று தின்றுவர வெள்ளைபடுதல், உட்காய்ச்சல், ரத்தவாந்தி, உடல் கொப்புளம் ஆகியவை தீரும். வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 48 நாட்கள் கொடுக்க நரம்புத்தளர்ச்சி, விரைவாதம், தாதுநீர்த்து போயிருப்பது போன்றவை நீங்கி உடல் பலமாகும். இளந் தென்னங்காய் மட்டையை இடித்துRead More


ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் – அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது. இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது. இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தானிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும்.Read More


காகிதப்பை தயாரிப்பில் மூத்த குடிமக்கள்:

கோவை மாநகராட்சி சார்பில் அண்மையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கண்காட்சியில், பிளாஸ்டிக் மறுசுழற்சி, பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் என ஏராளமான பயனுள்ள பொருட்கள் இடம் பெற்றன. அதில், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, வீணாகும் காகிதங்களால் செய்யப்பட்ட காகிதப் பைகளை பயன்படுத்தலாம் என சில முதியவர்கள் அறிவுரை கூறினர். அத்துடன், தாங்களே தயாரித்த காகிதப் பைகளை காட்சிக்கு வைத்து ஆச்சரியப்படுத்தினர். தள்ளாத வயதிலும் சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த முதியவர்கள், கண்காட்சியோடு நின்றுவிடாமல், காகிதப் பைகள் தயாரிப்பை தொடர் பணியாக மேற்கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மலையடிவார கிராமம் மத்திபாளையம். இங்கு கோவை மாவட்ட நலச்சங்கம் என்ற அமைப்பின் கீழ் முதியோர் இல்லம் இயங்குகிறது. கோவையைச் சேர்ந்த பல நன்கொடையாளர்கள் உதவியோடு, மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் இந்த இல்லம்Read More


தோஷங்கள் — பரிகாரங்கள்

மனிதர்கள் செய்யும் பாவங்களின் அடிப்படையில் அவர்களை பிடித்து வாட்டும் 5 விதமான பரிகார தோஷங்கள் பற்றி பார்க்கலாம். அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம் 5. ப்ரணகால தோஷம் எனப்படும். இந்த தோஷங்கள் மனிதரை மனம் மற்றும் உடல் ரீதியாகவும் பாதிப்பதாக கூறப்படுகிறது. பரிகாரங்கள் வஞ்சித தோஷம் : பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குவது வஞ்சிததோஷம். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும். பந்த தோஷம் : நம்மைRead More


நொடியில் கால் வலிபோகணுமா?

1.  செருப்புகளை கழற்றிவிட்டு காலை நன்கு தரையில் பதித்து நின்று கொள்ளவேண்டும். கட்டை விரலை உயர்த்தவேண்டும். பின் சுண்டுவிரலை உயர்த்தவேண்டும். இதே போன்று 5 முறை ஒவ்வொரு காலிலும் செய்தல் வேண்டும். 2.  தரையில் அமர்ந்து காலைகளை நீட்டி முன்னங்காலினை மென்மையாக பின்னோக்கி இழுக்கவேண்டும். இதனை ஒரு முறை செய்வதே போதுமானது. 3. கால் பாதங்களில் அதிக வலி இருக்கும் போது டென்னிஸ் பந்தினை கால் பாதங்களின் அடியில் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உருட்டவேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி கால்களில் வலி குறைகிறது. 4.   தரையில் பாதங்களை அழுந்த பதித்து நின்று கொண்டு முன்னங்காலை ஊன்றி குதிகால்களை உயர்த்தவேண்டும். இதே போன்று 10 முறை செய்தால் கால்வலி குறையும். 5. தரையில் படுத்து கொண்டு காலின் பாதங்களுக்கு அடியில் ஒரு உடற்பயிற்சி பந்தினை வைத்து பாதங்களைRead More


உலக பூமி தினம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பருவநிலை மாறுபாடு காரணமாக, புவி அதிகப்படியாக சூடாகி வருகிறது. இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு, வனவிலங்குகள் அழிந்து வருகின்றன. அறிவியலின் வளர்ச்சியால், ஆக்கத்தை விட அழிவு தான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் புவியைப் பேண நாம் செய்ய வேண்டிய சில செயல்கள் குறித்து இங்கே காணலாம். 1 – உங்களுக்கு நீங்களே செடி ஒன்றை பரிசளித்து கொள்ளுங்கள். அந்த செடிகள் உங்களைச் சுற்றிலும் உள்ள காற்றை தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்யும். அதுமட்டுமல்லாமல், உங்கள் மனதிலும் மகிழ்ச்சியை நிறைக்கும் 2 தேவையற்ற விளக்குகளை அணைத்து விடுங்கள். சூரிய ஒளி நிரம்பிக் கிடக்கும் பகல் பொழுதில், வீடுகளில் விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஆட்கள் இல்லா நேரங்களில் விளக்குகளை அணைத்து விடுங்கள் 3Read More