admin

 

எதை நோக்கி ஓடுகிறோம்

எதை நோக்கி ஓடுகிறோம்…. சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நிலைகுலைய வைத்த சூழல் நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப் படுவதற்கான காரணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளிகளில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது கூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறுRead More


சம்மணம்

​*சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா*? சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்… நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்… இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக காலைத் தொங்க வைத்துக் கொண்டே இருக்கிறோம். *இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*… இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது… *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும்Read More


கடவுள் − படித்ததில்   பிடித்தது

​இது ஒரு உண்மைச் சம்பவம்!. . கடவுள் இருக்கிறாரா? நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? ‘நிச்சயமாக ஐயா’ மாணவன் சொன்னான். ‘கடவள் நல்லவராஃ’ ‘ஆம் ஐயா’ ‘கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா? ‘ஆம்’ ‘என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய் வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய்? (மாணவர் அமைதியாய் இருக்கிறார்) ‘உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா?  சுரி………நாம் மீண்டும் ஆரம்பிப்போம், கடவுள் நல்லவரா’? ‘ஆம் ஐயா’Read More


அடுத்த சந்ததிக்கு

​A very good article.. must read ———————————————————–super alll must read and follow for our future generation உறவுகள்,,, தொடர்கதை!!! ‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்’னு நான் நினைச்சேன்.  சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது. ‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் – சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள்Read More


பிறப்பால் நாம்

​சிங்கங்களிடம்  பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் சிங்கங்கள்  என்றன ..! நாய்களிடம்  பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் நாய்கள்  என்றன ..! கழுதைகளிடம்  பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் கழுதைகள்   என்றன ..! பன்றிகளிடமும் கேட்டுவிட்டேன்  பிறப்பால் நீங்கள்  யார் என்று  ..? சிரித்தபடி ..! பிறப்பால் நாங்கள் பன்றிகள்   என்றன ..! மனிதர்களிடம்  பிறப்பால் நீங்கள்  யார் என்றேன் ..? ஒருவன்  பிறப்பால் நான் இஸ்லாம் என்றான். ..! மறொருவன்  தான் பிறப்பால் கிறிஸ்தவன் என்றான்..! இன்னொருவன்  பிறப்பால் தான் இந்து என்றான்..! அனைவருக்கும் தெரியவில்லை  நாம் அனைவரும் மனிதர்  என்று…? பிறப்பால் நாம் மனிதர் என்பதையும்  மறந்து…!  வாழும் வாழ்க்கையில் மனித நேயத்தையும்Read More


​காகத்திற்கு உணவிடுவது ஏன்?

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி’ என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின்Read More