Proud Of TamilNadu

​நேற்றை க்கும் இன்றைக்கும் தமிழ்நாட்டில் என்ன வித்தியாசம் ? 
நேற்று திங்கட்கிழமை… இன்று செவ்வாய்க்கிழமை… அதான் வித்தியாசம்!
கன்னடத்தில் பேச சொல்லி சில அரக்கர்கள் அந்த ஏழை தமிழ் கிழவனை அடிக்கும் பொழுது அவர் வெள்ளந்தியாக சிரிக்கிறாரே, ” இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பது போல ” அதே மனநிலை தான் இங்கே …
ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் …. ஆங்காங்கே ஜனநாயக அறவழி போராட்டங்கள் துளிர்விட்டிருக்கின்றன … அவ்வளவே ..பொது சொத்து நாசம் , நம்மை நம்பி வந்தவர் மீது தாக்குதல் என்கிற கேடு கெட்ட வேலைகள் எல்லாம் அரிது அரிது இங்கே மிக அரிது ! இங்கும் சில விஷமிகள் அரக்கர்கள் உள்ளனர் …இருப்பினும் பெரும்பாலும் அமைதியை மட்டுமே விரும்பும் ஊர் இது !!
85 வயது முதிர்ந்த நடிகர்  உடல் நிலை காரணமாக இறந்ததற்கு ஐந்து நாள் ஊரை கொளுத்திய ஊர் போல அல்ல இங்கே … முதலமைச்சர் கைது ஆனதே ஐந்து மணி நேரத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஊர் எங்கள் ஊர் !
மத்திய அரசுகளும் நட்ட நடு சென்டர்களும் , “இரு மாநில மக்கள் அமைதி காக்கவும் ..இரு மாநில மக்கள் …” என்று சேர்ந்து கூவ வேண்டாம் … சிரிப்பு தான் வருகிறது .. அமைதி வேண்டுகோள் விடும் படி இங்கு ஒன்றும் நடந்துவிடவில்லை …
தமிழகத்துக்கு அமைதி யாரும் சொல்லி தர தேவையில்லை … We are far more composed and matured !
அங்கு தான் அமைதி வேண்டும் , மனிதம் வெளி வர வேண்டும் … கர்நாடக பொது மக்களுக்கு அவ பெயர் வாங்கி தரும் அந்த அரக்கர்களை அரசு ஒடுக்க வேண்டும் ..உடனடியாக …. 
இத்தனை வீடியோக்கள் பார்த்த பின்பும் , தமிழகத்தின் இந்த பொருமை … இயலாமை என்றோ , சக தமிழர்களின் துன்பத்தை பார்த்து கவலையில்லாத நிலையன்றோ என்ன வேண்டாம் ….

இது பெரும் கலாச்சார மரபுவழி சார்ந்த ஒழுக்கம் … கடும் கோபத்தை அடக்கி –  ஜனநாயகம் மேல் நம்பிக்கை வைத்து காத்திருக்கும் பண்பு ! 
Proud Of TamilNadu

Leave a Reply