Mr.Kumar-The Supercop of Chennai

சோழிங்கநல்லூரில் போக்குவரத்தை கட்டுபடுத்துவதில் எப்போதும் சுறுசுறுப்போடு பணியாற்றி வருபவர் டிராபிக் போலீஸ் குமார். இவர் எப்போதும் சிரித்த முக பாவனைகளோடு போக்குவரத்தை கட்டுபடுத்துவதால் வாகன ஓட்டிகளின் இதயங்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவர் தன்னை தினமும் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அந்த நாளை சிறப்பாக தொடங்க வேண்டும் என கடமையாற்றுவதாக தெரிவித்தார்.

அதாவது வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும் என்பதால் நடனமாடுவது போலவும், உடலை வளைத்து, நெளித்து சாலையில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துகிறார். இது வாகன ஓட்டிகளுக்கு டென்சன் இருந்தாலும் விலகி விடும் என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் போது வாகன ஓட்டிகளை தனது வாடிக்கையாளர் போல் கருதுவதாக தெரிவித்தார்.

அது மட்டுமின்றி முதியவர்கள் சாலையை கடக்க உதவி செய்வதுடன், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தும் உதவுவார். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரின் இதயத்தையும் காவலர் குமார் கவர்ந்திழுத்துள்ளார்.

மேலும் இவர் பணியில் இருக்கும் ஒரு விபத்து கூட நடக்காத அளவுக்கு பணியாற்றுவார் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். என்னை கடந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் அனைவரும் மாலையில் பத்திரமாக வீடுபோய் சேர்ந்தார்கள் என்ற மனநிறைவுடனும், நிம்மதியுடனும் என்னுடையை ஒவ்வொரு கழிப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply