​Respect to Singapore

நான் நேற்று இரவு சுமார் பன்னிரெண்டு மணி அளவில் என் நண்பரை சந்தித்து விட்டு, தேக்காவில் இருந்து துவாஷ் நோக்கி வந்து கொண்டு இருந்தேன் , அப்போது எதிர் பாராத விதமாக நான் சொலுத்திய வாகனத்தின் இடது பக்க சக்கரம் வெடித்து விட்டது , ஆண்டவன் அருளால் எந்த ஒரு சேதமும் அடையாத வாரு வாகனத்தை ஒதுக்கு புறமாக நிறுத்தி விட்டேன்.
       பின்பு நானும் என் நண்பர்களும் மாற்று சக்கரத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தோம்,  சிறிது நேரத்தில்  (அதாவது பத்து நிமிடத்திற்குல்)   சிங்கப்பூர் பொது காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளும், மூன்று வாகனங்களில் என் அருகே வந்து நின்றார்கள், என்ன நடந்தது என்று என்னிடம் விசாரித்து விட்டு , என்னுடைய license, work permit இரண்டையும் சரி பார்த்தார்கள். 
     இது High Way என்பதால் சாலையிலோ, சாலையின் ஒதுக்கு புறத்திலோ வாகனத்தை சரிபார்க்க கூடாது, வேகமாக வரும் மற்ற வாகனங்களும் இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று என்னிடம் எடுத்து கூறினார்கள் 

( கவனிக்க வேண்டியது என்ன வென்றால் , கொஞ்சம் கூட முகம் சுலிக்காமல்  என்னிடம் எடுத்து கூறினார்கள் )  பின்பு அவர்கலுடைய  இழுத்து செல்லும் வாகனத்தின் மூலமாக, நான் செலுத்திய வாகனத்தை  அருகில் உள்ள Car Parking -ல் நிறுத்தி  விட்டு காவல் துறை அதிகாரிகள் சென்று விட்டனர், பின்பு EMAS Recovery Service ஊழியர்கள் எங்களுக்கு உதவி செய்தனர்.. அவர்கள் எனக்கு மாற்று சக்கரத்தை பொருத்தும் வரை என் கூட இருந்து உதவி செய்தனர்.. 
      இழுத்து செல்லும் வாகனத்திர்க்கோ அல்லது சக்கரம் மாற்றுவதர்க்கு எனக்கு உதவி செய்ததர்க்கோ அவர்கள் என்னிடம் ஒரு டாலர்(ரூபாய்) கூட வாங்கவில்லை .. மாறாக நான் கிளம்பும் போது Take Care.. Bye Bye என்று சிரித்த முகத்துடன் என்னை வழி அனுப்பி வைத்தனர்..
நன்றி சிங்கப்பூர் பொது காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை , EMAS Recovery Service.
குறிப்பு :-

           

       தமிழ் நாடு காவல் துறையினர் இதனை கண்டிப்பாக  படிக்கவும்.
FB Copy



« (Previous News)



Related News

  • மாதம் ரூ.12 லட்சத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை
  • ​தொடர் தோல்வியை தாண்டி, லட்சங்களில் நாட்டுக்கோழி முட்டை உற்பத்தி
  • ராமர் பிள்ளை 
  • காமராஜரைப் பற்றிய 20 அரிய தகவல்கள்
  • தனக்கு மிஞ்சி தான் தானம்
  • அமரர்.கார்த்திக் பாலாஜி ,9th class Fail 
  • ​நிகோலஸ் கோபர்நிகஸ்
  • ​தாய் நிறுவனத்தில் சேர்ந்தார் சுந்தர் பிச்சை
  • Leave a Reply