​வெள்ளைக்காரனின் சூழ்ச்சி உடைத்த தமிழன்

நிலவேம்பு குடிநீர் மருந்து சித்த மருத்துவர்கள் எல்லோருக்கும் தெரிந்த மருந்து இப்போது எல்லோருக்குமே தெரியும். 
  ஆனால் இதை வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தானதற்கும் பின்னால் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. 

  முதன்முதலாக மர்ம காய்ச்சல் உடல் வலியோடு மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னால் அது சிக்குன் குனியா என்றும் அதை குணமாக்கமுடியாது என்றும் அறிவித்தனர். 

எப்போதுமே வெள்ளையர் இந்தியர்களை குறிப்பாக சித்த மருத்துவர்களை ஏமாற்ற வாயில்நுழையாத பேரை நோய்க்கு வைத்துவிட்டு இந்த நோய் குணமாக்கவே முடியாது. வந்தால் ஆள் குளோஸ் என்று ஒரே போடாக போட்டு மக்களுக்கு மரணபயத்தை உண்டாக்குவார்கள் . எல்லோரும் பயந்த பிறகு ஒன்றிரண்டு மரணத்தையும் பத்திரிக்கையை வைத்து உலகமே அழியப்போகிறது என்ற ரேஞ்சுக்கு எழுத வைப்பார்கள் அடுத்த ஆறு மாதம் கழித்து நோய்க்கு தடுப்பூசியை வியாபாரம் செய்துவிடுவார்கள் 

  இப்படிதான் சிக்குன் குனியாவுக்கும் நடந்தது. நான் அந்த நோயின் குறிகுணத்தை வைத்து காய்ச்சல் வலி வாத காய்ச்சல் .என்று முடிவு செய்து என்னிடம் வந்த நோயாளருக்கு நிலவேம்பு குடிநீரை மருந்தாக வழங்கினேன். நோயாளர்கள் போன் செய்து நன்றி சொன்னார்கள் 

  உடனே அதன் மூலப்பொருளான சந்தன கட்டைகளை கர்னாடகத்திலிருந்து தருவித்து சிக்குன் குனியா கசாயம் என்ற பெயரில் சென்னை கந்தசாமி கோயில் தெருவிலுள்ள ராமசாமி செட்டி மூலமாக 50 ரூபாய்க்கு தமிழ்நாடு முழுக்க விற்பனை செய்யப்பட்டது . இந்த தகவல் மேல்நாட்டு மருந்து கம்பெனிக்கு தெரிந்து அவர்களின் கோபத்திற்கு ஆளானேன். 

   இது புகாராக அப்போது சுகாதார செயலராக இருந்த சுப்புராஜ் IAS க்கு சென்று அறிக்கையாக வெளிவந்தது . அந்த அறிக்கையில் சிக்குன்குனியா குணமாக்க முடியாது. யாறும் சிக்குன் குனியா மருந்து என்று விற்றால் கைது செய்யப்படுவார்கள் என்று காலை நாளிதழில் வெளியானது. 

   சித்த மருந்தை முடக்க மேலைநாட்டு மருந்து கம்பெனி சூழ்ச்சி செய்வதை உணர்ந்தேன். இந்த சூழ்ச்சியை உடைக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்கு. 

  உடனே மாலைமலர் ஆசிரியர் சந்தர் சாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவேம்பு குடிநீர் சிக்குன்குனியாவுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளக்கினேன். அன்று மாலைமலர் அனைத்து பதிப்புகளிலும் இதுதான் செய்தி. முதன்முதலாக இதுதான் மாலைமலர் வால்போஸ்ட்டரிலும் வந்தது. 

     அப்புறம் என்ன பத்து நாட்களிலேயே அரசு சித்த மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

     சிக்குன் குனியா தடுப்பூசியை 100 கோடி இந்தியர்களுக்கும் போட்டு இந்திய பொருளாதாரத்தை கொள்ளையடிக்கலாம் என்ற மேல்நாட்டு மருந்து கம்பெனிகளின் சூழ்ச்சி உடைக்கப்பட்டது
சித்தர் க திருத்தணிகாசலம்

Leave a Reply