​பிளாஸ்டிக் இல்லாத நாப்கின் தயாரிக்கிறோம்

நாப்கின் தொழிலில், சீன நிறுவனங்களுடன் மோதி ஜெயித்த வள்ளி: திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவள் நான். என் கணவர், கூலித் தொழிலாளி. அக்கம் பக்கத்து வீடுகளுக்கு துணி தைத்து கொடுத்து வந்தேன்; வருமானம் போதவில்லை.வேறு ஏதாவது தொழில் செய்ய யோசனை செய்த போதுதான், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மகளிரியல் துறைத் தலைவர், மணிமேகலை, தனியார் கல்லுாரி ஒன்றில், நாப்கின் தயாரிக்கும் பயிற்சி கொடுத்தார். 
ஐந்து நாட்கள் நடந்த பயிற்சியில், கையாலேயே நாப்கின் செய்வது எப்படி என, கற்றுக் கொண்டேன்.’மிகப்பெரிய கம்பெனி தயாரிக்கும் நாப்கின்களில், பிளாஸ்டிக் இருப்பதால் சூடாகி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மிக முக்கியமாக கர்ப்பப் பை புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படும் ஆபத்துகள் வரும்’ என, எங்களுக்கு பயிற்சி கொடுக்க வந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர். 
அதனால் தான் நாங்கள், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, நாப்கின்களில் பிளாஸ்டிக் இல்லாமல் தயாரிக்கிறோம். 

முசிறி வங்கியில், 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித் தான் நாப்கின் தொழிலை துவங்கினேன். முதலில் பெரிய நிறுவனங்களான சீன நாப்கின்கள் தான் பெண்களுக்குப் பிடிக்கும் என கூறினர். நான் கட்டாயப்படுத்தி, கையால் செய்த நாப்கின்களை இலவசமாக உபயோகிக்க கொடுத்தேன். 

அதுமட்டுமின்றி, முசிறியிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு நாப்கின்களை சாம்பிளுக்கு பயன்படுத்தக் கொடுத்தேன். பிடித்துப் போகவே, தலைமையாசிரியை அனுமதியுடன் தொடர்ந்து கொடுக்கவும் ஆரம்பித்தேன்.
பெண்கள் மத்தியிலும், போகப் போக ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஆர்டர்கள் வர ஆரம்பித்ததும், வீட்டிலேயே மிஷின்களை வைத்து, பெரிய அளவில் தயாரிக்க முடிவெடுத்தேன். இதற்காக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஒரு மாதம் பயிற்சியை, இலவசமாக கற்றுக் கொண்டேன். 

தொழிலை விரிவாக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம், 2.02 லட்சம் ரூபாய் லோன் வாங்கினேன். இப்போது மிஷின்கள் இருப்பதால், ஒரு நாளைக்கு, 1,000 பீசுக்கு மேல் உற்பத்தி செய்து, மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது.

‘ஸ்ரீ சிந்து சானிட்டரி நாப்கின்’ என்ற பெயரில், எட்டு பீஸ் வைத்து, 26 ரூபாய்க்கு விற்கிறேன். ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களைப் போல, தமிழக அரசு, எங்கள் நாப்கின்களை பெண்

களுக்கு கொடுக்க முன்வர வேண்டும்.தொடர்புக்கு: 99431-68244.

Leave a Reply