​இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை- சாவித்திரி பாய் பூலே

​இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை- சாவித்திரி பாய் பூலே (03.01.1831-10.03.1897), இன்று அவர் பிறந்த நாள்.

  மகாராஷ்டிராவின் சத்தார மாவட்டத்தில், நொய்காவ் எனும் இடத்தில் காந்தோஜி நெவ்சே மற்றும் லட்சுமி ஆகிய தம்பதியருக்கு மகளாக பிறந்தவர். விளிம்புநிலை மக்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்றை முதன்முதலாகத் துவக்கிய சாவித்ரிபாய் ஃபுலே அவர்களது பிறந்த நாளான, சனவரி-3 ஐ, நாம் ‘ஆசிரியர் தினமாக’க் கொண்டாதுவதில்லை. ஒருவேளை அவர் ஒரு பெண் என்பதலா?
சாதிய ஏற்றத்தாழ்வுக்கெதிராக, ஒற்றைக்கலாச் சாரத்தை முன்னிறுத்தும் போக்குகளுக்கு எதிராக, மகாத்மா ஜோதிபா ஃபுலேவும், அவரது மனைவி யான சாவிதிரிபாய் ஃபுலே அவர்களும் மிக பெரிய ஆயுதத்தை தமது கையிலெடுத்தனர். ஆம்…. அது “அனைவருக்கும் கல்வி” என்பதே. சமுகத்தின் விளிம்புநிலைக்கு தள்ளப்ப்பட்ட மக்களை, ஒருங்கினைத்த தோடு, அவர்களை அமைப்பாக்கி, மக்கள் இயக்கமாக உருவாக்கியதில் சாவித்ரிபாய் முதன்மை யானவராக இருந்தார்.
அக்காலத்தில் சாவித்திரிபாய் பூலே முறையான பாடசாலைக் கல்வி பெற்றி ராத போதிலும், அவரது கணவரான மகாத்மா ஜோதிபா ஃபுலே அவர்கள் சாவித்திரி பாய் கல்வி கற்க உறுதுணையாக இருந்ததால், பின்னாளில் அவர் தமது கணவர் துவக்கிவைத்த பள்ளியின் முதல் பெண் ஆசிரிய ரானார்.
ஆதிக்க சாதியினரின் ஏளனங்களையும், அருவருப்பான விமர்சனங்க ளையும், வெறுக்கத்தக்க செயல்பாடுகளையும் சகித்துக் கொண்டு, அக்கா லத்தில் அவர் செய்த ஆசிரியப்பணி, அத்தனை இனிமையாக அமைந்து விடவில்லை. ஒவ்வொருநாளும் அவர் ஆசிரியப்பணி செய்ய செல்லும் நேரத்தில், அவர் மீது கற்களை எறியவும், சாணத்தை வீசவும் செய்தனர். சில நேரங்களில் மனித கழிவுகளையும் அவர் மீது எறிந்தனர். ஆனால், சாவித்ரி பாய் இவை ஒவ்வொன்றையும் துணிச்சலாக எதிர்கொண்டார்.
தொட்டால் தீட்டு- அவர்களை பார்த்தால் தீட்டு- அவர்களுடைய குரலை கேட்டால் தீட்டு- அவ்வளவு ஏன், அவர்களுடைய நிழல்களைத் தீண்டினாலும் தீட்டு என்று கருதப்பட்டுவந்த காலத்தில், தீண்டப்படாத மக்களின் குடி நீர் தேவையை  தீர்க்கும் வகையில், சாவித்ரிபாய் ஃபுலே அவர்களும் மகாத்மா ஜோதி ஃபுலே அவர்களும் தீண்டப்படாத மக்களு க்காக தமது வீட்டிற்குள்ளேயே கிணறு தோண்டி, அவர்கள் தண்ணீர் எடுத்து செல்ல வழிவகை செய்தனர்.
ஒரு சமுகம் இழந்துபோன சமூக, கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டுமெனில், கல்வி மட்டுமே அடிப்படை என்பதை உணர்ந்து மகாத்மா ஜோதிபா ஃபுலே – சாவித்திரிபாய் பூலே தம்பதியினர் தாழ்த்தப்பட்ட  மக்களுக்குக் கல்வியை கற்றுத்தர முன்வந்தனர். இதன் விளைவாக சாவித்ரிபாய் ஃபுலே 1852ல் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. விதவைப் பெண்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொண்டுவிட வேண்டும் என்ற அக்கால சமூக வழக்கத்திற்கு எதிராக மும்பயிலும், புனேவிலும் நாவிதர்களின் வேலைநிறுத்தமொன்றை வெற்றிகரமாக நடத்துமளவு அவர் தீரம் கொண்டிருந்தார்.
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடிகளை சந்திக்க தமது கணவரோடு கடுமையாக உழைத்தார். மேலும் தீர்விற்கான ஆலோசனைகளையும் முன்மொழிந்தார். அதுமட்டுமின்றி, பல மையங்க ளில் இலவச உணவும் கிடைக்கச் செய்தனர். அன்றைய காலகட்டத்தில், பாதிப்புற்ற மக்களிடையே பணியாற்றிய சாவித்ரிபாய் ஃபுலே, பிளேக் நோயால் தாக்குண்டிருந்த ஒரு குழந்தைக்கு உதவிட சென்ற இடத்தில், பிளேக் கிருமி தொற்றிக்கொண்டதால் மரணமடைந்தார்.
ஜான்சி ராணி லட்சுமிபாய், மங்கம்மா போன்றோர் பெயரும், காந்தி-நேரு குடும்பத்தினரின் மனைவியர் மற்றும் தோழியர் பெயர்களும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றிருக்க, சாவித்ரிபாய் ஃபுலே போன்ற சரித்திர நாயகியின் பெயர், அதிலும் முதல் பெண் ஆசிரியையின் பெயர் இடம் பெறாமல்  போனதன் காரணத்தை பொது விவாதத்திற்கு நாம் கொண்டு வரவேண்டும்.
இருண்ட காலத்தில் உன்னதமான ஆசிரியப் பணியைத் துணிச்சலோடு மேற்கொண்ட சாவித்ரிபாய் ஃபுலே குறித்து நமது இந்திய சமூகம், குறிப்பாக ஆசிரியர் சமூகம் அறியாது.
ஒரு காலத்தில் இந்தியப் பெண்கள் கடக்கக் கூடாதெனவும், மன்னிக்கவே முடியாத எல்லைக் கோடுகள் அமைக்கப்பட்டு, பண்பாடு- கலாச்சாரம் என பின்பற்றப்பட்டு வந்ததற்கு எதிராக முதல் கலக குரல் கொடுத்தவர். ஆம் கிழிக்கப்பட்டுவந்ததை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிந்தவர் அவர். அதற்காக இன்றைய பெண்கள் சமூகம் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும்.
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில், கல்வியின் முக்கியத்துவத்தையும், பெண் கல்வியின் அவசியத்தையும் குறித்து அவர் எழுதிய கவிதை மிக முக்கியமானது, அக்காலத்தில் அவர் எழுதிய கவிதைகளில் மிக முக்கி யமான கவிதையை படித்தாலே, அவருடைய ஆளுமையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
“சுய சார்புடையவளாக இரு…

சுறு சுறுப்பானவளாகவும் இரு,

வேலை செய்,

அறிவையும் செல்வத்தையும் திரட்டு,
அறிவில்லையெனில்

நாம் விலங்குகளாக மாறிடுவோம்,

தனிமையை தவிர்த்திடு

போ… கல்வியை கற்றுக்கொள்;
ஒடுக்கப்பட்டோரின் 

கைவிடப்பட்டோரின் 

துயரங்களுக்கு முடிவு கட்டுங்கள்
கற்றலென்பது

உமக்கான பொன்னான வாய்ப்பு;
கற்றல் மூலமாக 

சாதிய சங்கிலிகளை 

உடைத்தெரியுங்கள்;
பார்ப்பனியத்தின் 

விரதங்களையும் வேதங்களையும் 

வீசியெறியுங்கள்.”
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பாய் பூலேவுக்கு வீரவணக்கம் … 

வீரவணக்கம்.

Leave a Reply