ஹாட்ரிக் சாம்பியனாகி இந்திய அணி சாதனை : உலக கோப்பை கபடி

* ஹாட்ரிக் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை
* 8வது முறையாக உலக கோப்பை சாம்பியன்

அகமதாபாத்: உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்திய அணி 8 முறை சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிபோட்டியில் ஈரானை 38-29 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்றது. 3வது உலககோப்பையின் கபடி இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  இன்று நடந்தது. இதில், இந்தியா, வங்கதேசம், ஈரான், அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட   12  அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் இருபிரிவாக  பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன.

kabadi

இதில் ஏ பிரிவில்  தென்கொரியா, இந்தியா ஆகிய அணிகளும், பி பிரிவில் தாய்லாந்து, ஈரான் ஆகிய அணிகளும்  முறையே முதல் இரு  இடங்களை பிடித்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி போட்டியில், முதல் போட்டியில் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த தென்கொரியா அணி ஈரானை சந்தித்தது. முதல் பாதியில் தென் கொரியா அணி 13-11 என்ற புள்ளி கணக்கில்  முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை எடுத்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. முடிவில்  ஈரான் 28-22 என்ற  புள்ளி கணக்கில்  வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை வீழ்த்தியதுடன் தோல்வியே அடையாத  தென்கொரிய அணியால் அரையிறுதியில் ஈரானின் அனுபவ ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்று வெளியேறியது.

kaba2d1i

இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பி பிரிவில் முதல் இடம் பிடித்த தாய்லாந்துடன் மோதியது. போனஸ் பாயிண்ட்டுடன்,  புள்ளி கணக்கை தொடங்கிய இந்திய அணி, சிறப்பாக ஆடி புள்ளிகளை அடுத்தடுத்து குவித்தது. ரெய்டு  மற்றும் எதிரணி வீரர்களை மடக்கிப்பிடிப்பதில் கச்சிதமாக  செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாய்லாந்து வீரர்கள்  திணறினர். முதல் பாதியில் இந்தியா 36-8 என்று முன்னிலை பெற்றிருந்தது.   பிற்பாதியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி  73-20 என்ற புள்ளி கணக்கில்  வெற்றிபெற்று 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. ரெய்டு மூலம் மட்டும்  இந்தியா 42 புள்ளிகளை திரட்டியது. சந்திப் நர்வால் மட்டும்ரெய்டில் 14 புள்ளிகளை பெற்றுத்தந்தார்.

kabad1i

இதனையடுத்து இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின. இதில், இந்திய அணி ஈரானை 38-29 என்ற புள்ளி கணக்கில் வென்றது.  ஏற்கனவே 2004, 2007ம் ஆண்டு  இறுதிபோட்டிகளிலும் இவ்விரு அணிகளுமே மோதின. இருபோட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று ஹாட்ரிக்  சாம்பியன்  என்ற பெருமையை பெற்றுள்ளது.

dinakaran

Leave a Reply