ரூ.5 க்கு சாப்பாடு.. ரூ.10 க்கு துணி”…குவியுது கூட்டம்..!

“ரூ.5 க்கு சாப்பாடு.. ரூ.10 க்கு துணி”…குவியுது கூட்டம்..!
?????????????
உண்ண உணவும் உடுக்க உடையும் இருந்தாலே போதும்..இந்த உலகத்தில் ஒரு மரியாதயானை வாழ்கையை வாழ்ந்து விடலாம் .

இந்திய நாட்டில், உலக அளவில் பணக்கார பட்டியலில் இடம் பெற்று இருபவர்களும் வாழ்கின்றனர். பசி பட்டினியால் வாடும் யாரும் இல்லாத அநாதை குழந்தைகளும் இதே இந்தியாவில் இருகின்றனர்.

உதவி
ஏழை எளிய மக்களுக்கு பல விஷயம் எட்டா கனியாகி விடுகிறது.அதில் குறிப்பாக வயிறார சாப்பிட கூட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, தனி ஒரு மனிதராய் மிக குறைந்த அளவில் உணவை வழங்கி வருகிறார் ஒரு நபர்

நோய்டாவை சேர்ந்த அனுப் கண்ணா என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில் ரூ.5க்கு சாப்பாடு வழங்கியும்,ரூ.10 க்கு துணிகளும் காலணிகளும் வழங்கி வருகிறார் என்றால் பாருங்களேன்.

அனுப் கண்ணாவின் இந்த செயலை பார்த்து அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்த அனுப் கண்ணா,”இந்த உணவகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 500 பேர் வரை வருகின்றனர்.இந்த உணவகத்தை நடத்துவதே ஏழை எளிய மக்களுக்கு, குறைந்த விலையில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எனதெரிவித்துள்ளார்.

அனுப் கண்ணாவின் இந்த செயலை பார்த்து நிறைய பேர் அவருக்கு பெரும் ஆதரவையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உடன் தங்களால் இயன்ற பொருள் உதவிகளையும் அளித்து வருகின்றனர்.

Leave a Reply