ராஜபாளையம் அருகே 100 ஏக்கர் கண்மாயை சொந்த செலவில் சீரமைக்கும் கிராம மக்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்மாயை கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் தூர் வாரி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் ஆகிய கிராமங்களுக்கு ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் வாகைகுளம் கண்மாய் கடந்த 10 ஆண்களுக்கு மேலாக தூர் வாரப்படவில்லை. அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்ததால் இந்த கண்மாயில் மழை நீர் அதிக நாட்களுக்கு தேங்குவதில்லை.

இதனால் கண்மாயை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரினர். எனினும் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அதிகாரிகள் தங்களது சொந்த செலவில் கண்மாயை தூர் வார முடிவு செய்தனர். இதற்கு விசைத்தறி, மருத்துவ துணி உற்பத்தி தொழிலதிபர்களும், ரோட்டரி அரிமா சங்கத்தினரும் உதவிக்கரம் நீ்ட்டியுள்ளனர். 15 நாட்கள் நடைபெற உள்ள கண்மாய் தூர் வாரும் பணிக்கு மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப் பணித்துறையிடமும் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply