மெலிசா புகைப்படக்கலைஞர்

கடந்த இரண்டு நாட்களாக வைரலாக பரவி வருகிறது ஒரு புகைப்படம்
ஒரு தாய் அவர் முதுகுப்பையில் ஒரு குழந்தை,அதே போல மார்பு பகுதியில் உள்ள பையில் ஒரு சிறு குழந்தை,அந்த குழந்தைக்கு இடது கையால் பால் புகட்டிக்கொண்டே வலது கையால் விளையாட்டு போட்டியை படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

பணிபுரியும் பெண்களின் பெருமையை பேசும் இந்தப் படத்தில் இருப்பவர் மெலிசா வார்லோ.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் வசிக்கிறார்.

கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணியாற்றிவருகிறார்.இவரது கணவர் ஜோஷ் இங்குள்ள புகழ்பெற்ற மேன்ஸ் பீல்டு லேக் ரைட் என்ற கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.இதே அணிக்கான புகைப்படக்கலைஞராக மெலிசா பணியாற்றிவருகிறார்.

Leave a Reply