முதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா

முதலமைச்சர் வீட்டில் ரேசன் அரிசியா!!!!! பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகயிருந்த போது நடந்த நிகழ்வு இது,
தன்னுடைய உதவியாளர் வைரவனிடம் இந்த வீட்ல நாம இரண்டுபேருதான். அரிசி பருப்பெல்லாம் பக்கத்தில இருக்கிற ரேசன் கடையில வாங்கிக்கோ.ஜனங்க என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் நம் சாப்பாடு என்றார்.

ரேஷன்ல வாங்குற அரிசி ஒருமாதிரி வாடைவீசுது ஐயா.. வேற மாத்திடலாமா? நல்ல அரிசி சாப்பிடலாம் என்றார் வைரவன்.
இதைகேட்ட காமராஜருக்கு எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது.
முதலமைச்சர்தாம்லே இந்த அரிசியை சாப்பிடனும்!! இந்த மக்களுக்கு என்னிக்கு நல்ல அரிசி கிடைக்குதோ அன்னிக்கு நானும் நல்ல அரிசி சாப்பிடலாம் என்றார்.

மக்களோடு மக்களாய் வாழ்ந்த முதல்வர். ஆட்சியில் தூய்மை, எளிமை, நேர்மையை உயிராய் கொண்டவர். பதவி ஆசையை தவிர்த்தவர்.
டாக்டர் பட்டம் கொடுக்கவந்தபோது அதை படிப்பில நல்லா சாதிச்சவங்களுக்கு கொடுங்கனு சொல்லி ஏற்க மறுத்தவர்.,,,,
இப்போது முடியுமா!!இதெல்லாம் நடக்குமா??

Leave a Reply