மருத்துவர் ராஜகோபாலன் அய்யா

##சின்ன_துரை
##மருத்துவர்_ராஜகோபாலன்_அய்யா
##ரத_வீதி_ஸ்ரீவில்லிபுத்தூர்

அய்யாவை பற்றி:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் நாச்சியார்பட்டி ஊரில் நா.கி .கோபாலசாமி நாயக்கர் அவர்களின் மகனாக பிறந்த அய்யா மருத்துவர் மதிப்புமிகு
கோ .ராஜகோபாலன் அவர்கள் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ரத வீதியில் மருத்துவமனை பல வருடங்களாக நடத்தி வருகிறார், எனக்கு தெரிந்து என் தாத்தா என் அப்பா மற்றும் நான் என மூன்று தலைமுறைகளை பார்த்தவர் ஆவார், இவர் நம் மக்களால் சின்ன துரை என்று செல்லமாக அனைவரும் கூப்பிடும் பெயருக்கு சொந்தக்காரர், கைராசி உள்ள மனிதர் ,ஏழைகளின் சிம்ம சொப்பனம் ,சிறந்த மேதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ,

முந்தைய தலைமுறை இவரின் பங்கு :

நாம் இப்போது நல்ல படிப்பறிவு மற்றும் அறிவுடன் இப்போது அனைத்தும் கற்றுக்கொள்கிறோம் ,ஆனால் போன தலைமுறை அதாவது சுமார் 15 வருடங்கள் முன்பு வரை எடுத்து கொள்ளலாம் அந்த காலகட்டங்களில் வீட்டில் எதாவது சண்டை ,குடும்ப பிரச்சனை காரணங்களில் என்றால் உடனே விவசாய பூச்சிக்கொல்லி மருந்துகள் எதாவது ஒன்றை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயலுவார்கள், அப்போது கடவுளாக அனுப்பிய மருத்துவர் தான் அய்யா சின்னதுரை அவர்கள் ,எனக்கு தெரிந்து இன்று பல உயிர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பது இவரால் மட்டுமே ,எத்தனையோ உயிர்களை காப்பாற்றி நம் மக்களுக்கு வாழ்கை மற்றும் வாழும் நம்பிக்கை கொடுத்தவர் அய்யா சின்னதுரை அவர்கள் ,இரவு பகல் எந்த நேரத்திலும் அப்போது நம் மக்கள் எதாவது அவசர உதவி என்றால் 24 மணி நேரமும் சேவை செய்தார் , பல நேரங்களில் இவரால் நாம் இன்று குணமுடன்
வாழ்கிறோம்

ஆறுதல் தன்னம்பிக்கை :

எவ்வளவு பெரிய பயத்துடன் சென்றாலும் ஒன்றும் இல்லை இதுக்கு தான் அழுதாய் என்று நம்மை நம்பிக்கை பட செய்வார் நாமும் வலியை மறந்து விடுவோம் , நம் இப்போது எதாவது உடல்நிலை சரி இல்லை என்று போனால் அது இது என்று போட்டு நமது மொத்த பணத்தை பிடுங்கி கொண்டு அனுப்பும் மருத்துவர் மத்தியில் என்னடா ஒன்னும் இல்லை இது ஒன்றும் இல்லை தைரியம் சொல்லி நம்பிக்கை ஊட்டி உண்மையை சொல்லி அனுப்பும் மருத்துவர் ,மருத்துவ துரைக்கு இன்றும் இந்த முதிர்ந்த வயதில் நம் மக்களுக்காக இந்த மருத்துவ சேவையை செய்து வருகிறார் , இவர் இன்று இல்லை என்றால் பல உயிர்கள் வாழ்கை கேள்வி குறியாக இருக்கும் அப்படி பட்ட நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ,

இப்படிப்பட்ட நல்ல மனிதர் இனி கிடைப்பது கடினம் இவர் மருத்துவ துறையில் பல சிறப்பு விருதுகள் பெற்றுள்ளார்..!!
இவர் 100 வயது தாண்டி நீடுடி வாழ வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார மக்கள் சார்பாக வேண்டி கொள்வோம்..!!

Leave a Reply