மண் உருண்டை

​அருப்புக்கோட்டையில் நடந்த அண்ணன் மகள் திருமணத்தில் இந்த மண் உருண்டைகளை தாம்பூலப்பையில் வைத்துக்கொடுத்தார்கள்..

*

இது என்ன என்று தெரியாத நிலையில் நேற்று தொலைபேசியில் விபரம் சொன்னார் அண்ணன்.. 

***இந்த மண் உருண்டைக்குள் ஒரு மரத்தின் விதை உள்ளது… மண்ணில் புதைத்து வைத்தாலே அது வளரும்… எந்த மண்ணில் புதைபடுகிறதோ அந்த மண்ணின் தன்மைக்கு மாறும் வரை அதற்கான உரச்சத்துகள் அந்த மண் உருண்டையில் இருப்பதாகவும்*** சொன்னார்

*

மாப்பிள்ளை வீட்டார் ஏரல் பகுதியில் உள்ள வளமான மண் கொண்ட பகுதியிலிருந்து இதைச் செய்து கொண்டுவந்ததாகவும் சொன்னார்..

மரம் வளர்க்க இது ஒரு புது முயற்சியாகப் பட்டது..

*

எதோ கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட புணித மண் வகை என்றெண்ணி தூக்கி வீச இருந்த நான் இதை மண்ணில் விதைத்துள்ளேன்

– முகநூல் அன்பர்…

Leave a Reply