பெர்னார்ட்ஷா

பெர்னார்ட்ஷா ஓர் ஓவியரிடம் தனது படத்தை வரைந்து தந்தால் 100 பவுண்ட் தருவதாகச் சொன்னார்.

ஓவியர் தத்ரூபமாக வரைந்து கொடுத்தார். ஷா மகிழ்ச்சியுடன் 100 பவுண்ட்களையும் 20 பவுண்ட் வீதம் பிரித்து 5 காசோலைகளாக எழுதி, அத்துடன் ஒரு பாராட்டுக் கடிதத்தையும் இணைத்து ஓவியரிடம் கொடுத்தார்.

george_bernard_shaw_quote
“”ஐயா, 5 காசோலைகளாக ஏன் தருகிறீர்கள்? ஒரே காசோலையாகத் தரக்கூடாதா?” என்று கேட்டார் ஓவியர்.

“”இந்தக் காசோலைகளை மாற்ற வேண்டாம். இப்போது என் கையெழுத்துக்காக நானே 30 பவுண்ட்கள் வாங்குகிறேன். என் கையெழுத்துள்ள இந்த 5 காசோலைகளையும் தனித்தனியே விற்றால் உனக்கு 150 பவுண்ட்கள் கிடைக்கும். 50 பவுண்ட் உனக்கு லாபம். எனக்கும் லாபம்…” என்றார் ஷா.


“”உங்களுக்கு எப்படி லாபம்?” என்று கேட்டார் ஓவியர்.

“”என் கையெழுத்துள்ள காசோலையை யாரும் மாற்றப் போவதில்லை. பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள். அதனால் வங்கியில் என் பணம் அப்படியே இருக்கும்…” என்றார் ஷா.

 

Leave a Reply