பெரியார்

அதனால் தான் அவர் “பெரியார்”….. 
ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் 1960இல் பயிற்சி வகுப்பு நடத்தும்போது, ஒரு மாணவரை அழைத்து, உங்கள் அப்பா என்ன வேலை செய்கிறார்? சம்பளம் எவ்வளவு? ஒருவாரத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்று கேட்டார்……
 மாணவன் தன்னுடைய அப்பா அரசுப்பணியில் இருப்பதாகவும், மாதம் ரூபாய் 150/- சம்பளம் வாங்குவதாகவும், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு எனவும் கூறினார்……. 
மீண்டும் பெரியார், உங்கள் அம்மா என்ன வேலை செய்கிறார் என்று கேட்டார்……
 மாணவன் அம்மாவுக்கு வேலை எதுவும் கிடையாது, சும்மாதான் வீட்டிலிருக்கிறார் என்றார்……. 
அதற்கு பெரியார், அப்படியானால் உங்கள் வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது, சமையல் செய்தபாத்திரங்களை சுத்தம் செய்வதெல்லாம் யார்? என்று கேட்டார்……. மாணவன் கூச்சத்தோடு, அம்மாதான் என்றார்……..அய்யா… உங்கள் அம்மாவுக்கு வாரத்தில் எத்தனை நாள் ஒய்வு கொடுக்கிறீர்கள்? என்றார்…….
 மாணவன் … ஒருநாள் கூட கிடையாது… வருடம் பூராவும் வேலைதான் என்றார்………
அய்யா மீண்டும், உங்கள் வீட்டில் கடைசியாக சாப்பிடுவது யார் என்று கேட்டார்……. 
மாணவன் …. நாங்கள் எல்லோரும் சாப்பிட்டபின், மிச்சம் இருப்பதை அம்மா சாப்பிடுவார்…அப்படி மீதம் இல்லை என்றால் பட்டினியாகவே இருந்திடுவார்… என்றார்……
ஐயா கேட்டார்… உங்களம்மாவுக்குசம்பளம் எவ்வளவு தருகிறீர்கள்? என்றார்…….. 
மாணவன்… அப்படி ஏதும் கொடுப்பதில்லை என்றார்…… 
அய்யா சொன்னார், உங்கள் அம்மா செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக சம்பளம் கொடுத்தால், குறைந்தது 600 ரூபாயாவது கொடுக்க வேண்டும்… வீட்டில் பெண்களின் உழைப்பிற்கு மரியாதை இல்லாமல் போனதால்தான்… அவர்களுக்கு வேலை இல்லை… சும்மாதான் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்……எனவேதான் சொல்கிறேன்… ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட வேண்டுமென்று…
பெரியாரின் கொள்கை கடவுள், சாதி மறுப்பு மட்டுமன்று… பெண் விடுதலையும் முக்கியமான பணியாகவே இருந்தது…

Leave a Reply