பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் – பிரதமர் மோடி

​பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு மாதம்தோறும் அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். அதன்படி நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 2 பரிசுத் திட்டங்களை அறிவித்தார், வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகையும் அறிவித்து இருக்கிறார். அவருடைய நேற்றைய உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது.

பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் பினாமி பெயர்களில் வாங்கி குவிக்கப்படும் சொத்துகள் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.  
பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு மாதம்தோறும் அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். அதன்படி நேற்று வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ரொக்கமில்லா பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 2 பரிசுத் திட்டங்களை அறிவித்தார், வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகையும் அறிவித்து இருக்கிறார். அவருடைய நேற்றைய உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. 
பிரதமர் மோடி பேசுகையில், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு பின்னர் அடிக்கடி விதிகளை மாற்றி வருவதாக எழுந்து வருகிற புகாருக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘இந்த அரசாங்கம் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுகிற அரசாங்கம். தேவைப்படுகிறபோது, மக்கள் அனுபவிக்கிற அசவுகரியங்களை கவனத்தில் கொண்டு, அவர்களது கஷ்டங்கள் தீருகிற வகையில்தான் விதிகளை மாற்றுகிறது’’ என குறிப்பிட்டார்.
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பைத் தொடர்ந்து வரவுள்ள பினாமி சொத்து ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பினாமி சொத்து சட்டம் 1988–ம் ஆண்டு அமலுக்கு வந்தபோதும், அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை, அதற்கான அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை, அது ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடந்தது என அவர் சுட்டிக்காட்டினார். இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, ‘‘நாங்கள் அந்த சட்டத்தை எடுத்து சீரமைத்திருக்கிறோம். பினாமி சொத்துகளுக்கு எதிரான கூர்மையான சட்டமாக மாற்றி இருக்கிறோம். 
வரும் நாட்களில் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வரும். நாட்டின் நலனுக்காக, நாட்டு மக்களின் நலனுக்காக, என்னென்ன செய்ய வேண்டுமோ, அதற்கு அதிகபட்ச முன்னுரிமை தருவோம்’’ என்று கூறினார்.

DailyDhanthi

Leave a Reply