தேசிய_கணித_தினம்

தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் (திசம்பர்’22) இன்று!!
தேசிய கணித தினமாக பல்வேறு கல்விநிறுவனங்களில் கொண்டாடப்பட்டது.

உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. 
இவர்,

அழகியசிங்கர் வீதியில் : 
உலகப் புகழ்பெற்ற கணிதமேதை #ராமானுஜர், ஈரோடு அழகர்சிங்கர் வீதியில் 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் சீனிவாசன், தாயார் பெயர் கோமளத்தம்மாள்.
பூர்வீகம் கும்பகோணம் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவரான ராமாஜனுரின் தாய்வழிப் பாட்டனார் ஈரோடு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். எனவே, கோமளத்தம்மாள், தனது பிரசவத்துக்காக ஈரோட்டுக்கு தாய் வீட்டுக்கு வந்தார். இங்கு 

ராமானுஜரின் பிறப்பு குறிப்பு, அப்போதைய ஈரோடு நகர்மன்ற ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தேற்றங்களின் தோற்றம்: 
குழந்தை பருவத்தில் சில ஆண்டுகள் வரை ஈரோட்டில் இருந்த அவர், பள்ளிப் படிப்பு படிக்க கும்பகோணம் சென்றுவிட்டார். தனது 13-வது வயதில் புதிய தேற்றங்களை கண்டறியத் தொடங்கினார். கல்லூரியில் சேர்ந்தபோது கணக்குப் பாடத்தில் மட்டும் மிகச் சிறப்புடன் மதிப்பெண்களைப் பெற்றார்.
தேர்வில் தோல்வி: கல்லூரி படிப்புக்கு முந்தைய படிப்பான எஃப்.ஏ. படிக்கும்போது ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாததால், 1912-ம் ஆண்டில் சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து பணியாற்றினார்.
#ஹார்டியும்_ராமானுஜரும்
அப்போது இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹார்டி வெளியிட்ட கணித புதிருக்கு உலகில் பல நாடுகளில் இருந்தும் பலர் விடைகளை அனுப்பி வைத்தனர். ஆனால், ராமானுஜர் அனுப்பிய விடைதான் மிகச்சரியாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஹார்டிக்கும், ராமானுஜருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
ஹார்டி தான் காரணம்: கடந்த 1913-ம் ஆண்டில் ராமானுஜர் தனது கணித ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை ஹார்டிக்கு அனுப்பி வைத்தார். ஹார்டிதான் பின்னாளில் ராமானுஜரின் திறமைகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்

4000 கணக்குகளும்… அதன் விடைகளும்… கணிதத்தில் உச்சத்தைத் தொட்ட ராமானுஜர், மூன்று நோட்டுகள் விட்டுச் சென்றுள்ளார். அதில், 4000 கணக்குகளும், அதற்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. 1920-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது, அவருக்கு வயது மூப்பத்திரெண்டு அரை தான். அவர் கண்ட கணித முடிவுகள் இயற்பியல், கணினி இயல் துறைகளிலும் பயன்படத் தொடங்கியுள்ளன.
இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது!
#தேசிய_கணித_தினம்

#National_Mathematics_Day

Leave a Reply