தீபா கர்மகர் பிறந்த தினம்!

ஜிம்னாஸ்டிக்கில் இறுதுச்சுற்றை உறுதி செய்த  தீபா கர்மகர் பிறந்த தினம்!
தீபா கர்மகர்  இந்தியாவில் இருந்து யாரும் செய்யாததை செய்து அசத்தி இருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் முதல்முறையாக  இறுதிச்சுற்றுக்குக் தகுதி பெற்று சாதனை செய்துள்ளார்.
தீபா கர்மகர் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி  இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் பெலொனியா என்ற இடத்தில் பிறந்தார்.
இவரை பற்றிய இரண்டு செய்திகள் ஆச்சர்யமளிப்பவை,  கடந்த 2014இல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இதே வால்ட் பிரிவில் இந்தியாவிற்காக பங்கேற்ற இவர் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.  அடுத்து ஆண்டே, ஹிரோசிமாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இதே வால்ட் பிரிவில் இந்தியாவிற்காக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒலிம்பிக்கில் நடந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் ப்ரொடுனொவா வால்ட் பிரிவில் பங்கேற்ற தீபா 14,850 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்தார். இதே பிரிவில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவை செர்ந்த சைமன் பைல்ஸ் 16,050 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். தெங்கொரீயாவை செர்ந்த ஜொங் உன் ஹொங் 15,683 புள்ளிகளுடனும் சுவிட்சர்லாந்தை செர்ந்த கியுலியா ஸ்டெயின்ருபெர் 15,266 புள்ளிகளுடனும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர். இதன் இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 14ஆம் தெதி நடைபெறவுள்ளது. இவர் இறுதிப்போட்டியில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புள்ளிகள் சேர்க்கும் பட்ச்சத்தில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி. ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வெல்ல காத்திருக்கும் தீபா கர்மகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்வோம்.
முரளி.சு

(மாணவப் பத்திரிகையாளர்)
#HBDDipakarmakar

Leave a Reply