திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்

​அரசு பள்ளி சத்துணவை மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த திருவண்ணாமலை கலக்டர், குவியும் பாராட்டுக்கள், இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது படியுங்கள்

சம்பவம் 1

திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம், தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் (ரிங் ரோடு அருகில்) கடந்த 11ம் தேதி மாலை 5:30 மணியளவில் பைக்கில் தன் குடும்பத்துடன் ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அவர் நிலை தடுமாறி பைக்கிலிருந்து தன் குடும்பத்துடன் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கினார்.

பின்னர், வலிப்பினால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்த அந்த வாலிபரை முதலுதவி அளித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தன் காரிலேயே ஏற்றிக்கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

சம்பவம் 2

சக ஊழியர்களுடன் பூங்கா பகுதியில் புல்வெளியில் அமர்ந்து சகஜமாகவும், வேறுபாடு இல்லாமலும் மதிய உணவு சாப்பிட்டார் திருவண்ணாமலை ஆட்சியர் பிரசாந்த்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ள ஆட்சியர் பிரசாந்த் அவர்களுக்கு ‘சபாஷ்’ தெரிவிக்கலாமே!
சம்பவம் 3

திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் சத்துணவு தரமாக சமைத்து கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது.

இதையடுத்து அந்த பள்ளியில் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனை பள்ளி மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.


பிரசாந்த் தான் ஆட்சியர் என பெரிதாக நினைக்காமால் நாளுக்கு நாள் அவர் மிக எளிமையாக நடந்து கொள்ளும் இது போன்ற விஷயங்களும் சமூக அக்கரையுடன் நடந்து கொள்ளும் விதமும் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆட்சியர் பிரசாந்த் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

மனதார பாராட்டுகி்ன்றோம்.

நல்லவர்களை ரொம்ப நாளைக்கு இந்த அரசியல் வாதிகள் பணியில் வைத்துக் கொள்ள மாட்டார்களே .

நீண்ட நாள் பணியில் இருந்து மக்களுக்காக பணியாற்ற வாழ்த்துகின்றோம்

Leave a Reply