தியாகி ராஜாமணி சரஸ்வதி

பணம் பதவி ஆசை ஆதலால் மறந்தோம்
இறப்பிற்கு பத்து பேர் கூட போகவில்லை இதுவே சினிமா பிரபலம் என்றால் அன்றே ஆணுக்கு நிகரானவர்

உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அம்மையார்

கண்டுகொள்ளப்படாத தியாகம்.
தியாகி ராஜாமணி சரஸ்வதி.

தனது 16 வயதில் தனது நகைகளை INAவிற்கு வழங்கி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் #மணி எனும் பெயரில் ஆண் உளவாளியாக பணியாற்றி பல இன்னல்களை சந்தித்து சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு கடைசி வரை கொள்கையோடு வாழ்ந்தார்.

கொடுமை என்னவென்றால், அவரின் இறுதி சடங்கின்போது வந்தது பத்திற்கும் குறைவானவர்களே..

இவரைப் பற்றி,
பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள் சரஸ்வதி ராஜமணி. தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.

இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் ‘விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கொடுக்கிறார்.
‘இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது’ ராஜமணி பதில் அளிக்கிறார்.

அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை ஐ.என்.ஏ(INA)வின் உளவு பிரிவில் இணைத்துக் கொள்கிறார்.

இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.

சுதந்திரத்திற்குப் பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்.. டெல்லியில் அது சம்பந்தமான பேரணி என்றால் உற்சாகமாக கிளம்பி வருவார்..

உடலில் முன்பிருந்த வலு இல்லை என்றாலும். குடும்ப உறவுகள் அதிகம் இல்லை என்றாலும், மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும் பொது போராட்டத்தில் எதையும் எதிர்பார்க்காமல் இறங்குவார்..

அரசாங்கத்தின் பென்சனில் வாழ்ந்தார்.. சென்னையில் சுனாமி வந்தபோது சேர்த்து வைத்த பென்சன் தொகையை நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.

காலை முதல் மாலை வரை போராட்டத்தில் நிற்பார், கிடைக்கும் உணவை உண்ணுவார்.

அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைப்பார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுவார்

நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது எல்லாம் அழுவார்..
ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அதுதானே செல்வம்,

இந்தியாவில் வீசும் சுதந்திரக் காற்றில் சரஸ்வதி ராஜாமணியின் வியர்வையும் கலந்திருக்கிறது என்பதை மறக்க வேண்டா..

ஆனால் இவரின் இறப்பிற்கு 10 பேர் அளவிலே கூட்டம் வந்தது, இதுவே சினிமா பிரபலம் என்றால்..? ஏனென்றால் அவர்கள் தானே கஷ்டப்பட்டு நம்மை உற்சாகபடுத்துகிறார்கள்..

ஒவ்வொரு இந்தியனுக்கும் உரைக்க வேண்டிய விஷயம்..

Leave a Reply