டிசம்பர்-30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் பிரதமர் மோடி எச்சரிக்கை

ஊரக வளர்ச்சியை மேம்படுத்த முதலில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார்.
மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து மும்பையில் பிரதமர் மோடி இரண்டு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
புனேவில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
# தேசிய ஊரக வளர்ச்சி திட்டப்பணிகளில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது.
# ஊரக பகுதிகளில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை களைய வேண்டும்.
# ஊரக வளர்ச்சியை மேம்படுத்த முதலில் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.
# கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
# இந்த அறிவிப்பின் மூலமாக, இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார மாற்றம் வரும். நாட்டு மக்களின் நம்பிக்கை வீண்போகாது.
# நேர்மையற்றவர்களே, நீங்கள் 125 கோடி மக்களின் மனநிலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். அரசின் நடவடிக்கையால் நீங்கள் பயப்பட வேண்டி வரும். வலிமைமிக்க இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வருவோம்.
# நாங்கள் பதவியேற்ற நாள் முதல் ஊழலுக்கு எதிரான போராட்டம் நடந்தி வருகிறோம். நவம்பர் 8-ம் தேதி வரலாற்று மிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
# இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியா உலகின் முன்ணனி நாடாக இருக்கும்.
# ஊழலை நாட்டில் இருந்து வேறோடு ஒழிக்கும் வரையிலும் அதில் வெற்றி கிடைக்கும் வரை இந்த கறுப்பு பண போர் தொடரும்.
# ரொக்கமற்ற பண பரிவர்த்தனைக்கு மாறுவது அவசியம்.
# டிசம்பர்-30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.