சோதனைகள் படிக்கல்லாய்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, இன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மாரியப்பன் தங்கவேலு.

இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் இவரின் வலது காலின் மீது லாரி ஏறியதால் இவரால் சாதரான குழந்தை போல நடக்க முடியாமல் போனது. அப்போதில் இருந்துதான் இவர் மாற்றுத் திறனாளியானார்.

நீண்ட நாள்கள் ஓய்வுக்கு பிறகு திரும்பி வந்த மாரியப்பன் சாதனைகளை தன்வசமாக்க புறப்பட்டார். சாதிக்கப் புறப்பட்டவர் யாராயினும், அவமானங்கள், கேலி, கிண்டல்களைத் தாண்டாமல் வரமுடியாது. இவருக்கும் அதுபோன்ற அவமானங்கள் அரங்கேறியது.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் மற்ற மாணவர்கள் உயரம் தாண்டுதலில் தங்களது திறமைகளை காட்டினர். தன்னாலும் தாண்ட முடியும் என்று சொன்னபோது, இவரின் வெளித்தோற்றத்தை வைத்து இவரை கேளி செய்தனர். மனமுடைந்தார். இருந்தும், தன் திறமையை பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றபின், தனியாக விளையாட்டாய் உயரம் தாண்டினார். இதனைப் பார்த்த பெரிய வடக்கம்பட்டி அரசு பள்ளியின் ஆசிரியர்கள் உயரம் தாண்டுதலில் மாற்றுத் திறனாளிகளுக்கான அளவை விடவும், சாதாரண மனிதர் தாண்டும் உயரத்தை இவர் தாண்டியதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

இவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இவர் சாதாரண மாணவர்களுடன் போட்டிப் போட்டே வெற்றிப் பெற்றார் எனபது குறிப்பிடத்தக்கது. கேலி கிண்டல்களையும், அவமானங்களையும் கடந்து, பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவோடு சாதித்து தீரே வேண்டும் என்று தன்னுடைய இலக்கை உயர்த்தினார்.

இவரது அனைத்து சாதனைகளுக்கும், இவர் கடந்துவந்த சோதனைகள் படிக்கல்லாய் அமைந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Leave a Reply