செல்லாபணம்

​பிரதமர் மோடியின் “செல்லாபணம்” திட்டத்தை பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்க்கின்ற நிலையில் சார்ட்டட் அக்கவுண்டண்ட் அளவிலான சிலரிடம் பேசிய போது இந்த திட்டம் நுணுக்கமானது,வரவேற்கத்தக்கது என்று விளக்கமாகவே கூறுகிறார்கள்.

இந்திய பொருளாதார சரிவிற்கு கள்ள நோட்டு புழக்கம் பெரிதும் பங்கு வகிக்கிறது.அதற்கு காரணம் பாகிஸ்தான். அந்த நாட்டின் கள்ளத்தனத்துக்கு சீனா ஆதரவு கரம் கொடுக்கிறது. இன்று நேற்று நடக்கின்ற அக்கபோர் இல்லை இது.
காலம் காலமாக நடந்து வருகின்ற  மறைமுகப்போர் ஆகும். இதை எதிர்க்க துணிவில்லாத அரசுகளையே இந்தியா இதுவரை சந்தித்திருக்கிறது.
ஒரு வேளை நரேந்திர மோடி பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிரதமராகியிருந்தால் இந்த செல்லா பணம் திட்டத்தை  அப்போது அவர் கொண்டு வந்திருப்பார். பாகிஸ்தானின் மறைமுகப்போரை துவம்சம் செய்திருப்பார்.
 ஆனால் அந்த தருணம் தற்போது வந்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் வாயிலாக  ரூ.500. மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 14.05 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தன.
அதே வேளையில் அரசு வெளியிட்ட இந்த அளவை விட கூடுதலான கள்ள ரூபாய் தாள்கள் புழக்கத்தில் இணைந்து கொள்ளவே பொருளாதார அளவீட்டை கணக்கில் கொள்ள இயலாமல் போனது. இதனால் பங்கு வர்த்தகத்தில் அவ்வப்பொழுது முடக்க நிலை, குழப்ப நிலை.
  இந்த நிலையை போக்கிட மோடி அண்ட் டீம் போட்ட ரகசிய திட்டத்தின் விளைவே ரூ.500. மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டம். சரி 1000 ரூபாய் நோட்டை ஒழித்தால்  அதற்கு பதிலாக புதிய 1000 ரூபாய் நோட்டை தானே அச்சடித்திருக்க வேண்டும்?
எதற்காக 2000 ரூபாய் நோட்டை அடிக்க வேண்டும் என்கிற ஐயத்துக்கு சூப்பர் விளக்கத்தை அளித்தனர்.
அதில் பழைய  1000 ரூபாவை கொடுத்துவிட்டு புதிய 1000 ரூபாவை மாற்றிக்கொண்டால் பணவீக்கம் அப்படியே தான் இருக்கும்.
அதேவேளையில் இரண்டு பழைய 1000 ரூபாய்க்கு  ஒரு 2000 ரூ.நோட்டு மாற்றி கொடுப்பதால்  பதுக்கி வைத்திருக்கிற பணம் வெளியே வரத் துவங்கும் என்பதே திட்டம்.
  அதே வேளையில் புதிய ஐநூறு ரூபாய் நோட்டை உடனடியாக மாற்றி கொடுத்திருந்தாலும் பதுக்கல் பணம் கணக்கில் வராமலேயே ஒய்ட் மணியாகியிருக்கும்.
ஆகவே தான் 15 நாட்கள் இடைவெளியில் இந்த புதிய நோட்டுகளை அரசு வெளியிட்டிருக்கிறது.
அப்படியிருந்தும்  தற்போதைய நிலவரப்படி 7லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பழைய நோட்டுகள் மட்டுமே புதிய நோட்டுக்காக கணக்கில் வந்திருக்கிறது.
இன்னும் 50.05 சதவிகித பழைய நோட்டுகள் பதுக்களிலேயே உள்ளன. அவற்றில் பெரும் பங்கு வங்கிகளில் மாற்றப்படாமல் தங்கமாக கள்ள மார்க்கெட்டுக்குள் புகுந்துவிட்டது.
இந்நிலையில் பழைய நோட்டுகளை கணக்கில் கொண்டுவர கடைசி தேதி டிசம்பர் 30. இந்த வரம்பின் அடிப்படையில் பல்வேறு வரி, அபராதம் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள துணிந்தவர்களுக்கே இது சாத்தியம்.
அப்படி இந்த கால அவகாசத்தை பதுக்கல் மன்னர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை அயல் நாட்டில் மாற்றிக்கொள்ளலாம் என்று புரோக்கரிஸம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சிஸ்ட்டத்தையும் Fii எனப்படும் “பாரின் இன்வெஸ்ட்மென்ட் இன்ஸ்ட்டிடியூஷன்” என்பதின் மூலம் மத்திய அரசு செக் வைத்துவிட்டது.
இனி இந்திய பணத்தை வெளிநாட்டு வங்கிகள் அவ்வளவு சுலபமாக டெபாசிட் செய்யாத அளவில் கிடுக்கிபிடி போட்டுவிட்டன.
   மேலும் ஒரு அரசியல்வாதி தன்னிடம் உள்ள பணியாட்களின் கணக்கில் தலா 2 லட்சத்தை போடுகிறார் அதனால் அவரிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றிவருகிறார் என்று சொல்வதெல்லாம் லட்சங்களில் நடக்கலாம், ஆனால் கோடிகளில் நடக்க வாய்ப்பே இல்லை என்று அடித்துச்சொல்கிறார்கள்.
மோடியின் ஒரே எண்ணம் என்னவென்றால் “ஆல் ஆர் இக்குவல்”  பணத்தை கையில் தொட்டு பார்க்க நினையாதே. ஈ பேங்கிங் மற்றும் ஸ்வைப் மூலம் பரிமாற்றத்தை நடத்துங்கள் என்பதே அவரது எண்ணம்.
இப்படியே போனால் இந்தியாவில் சத்தியமாக பிச்சைகாரர்களே இருக்கமாட்டார்கள். லஞ்ச அதிகாரிகளும் ஒடுக்கப்படுவார்கள்.
அப்படியே இருந்தாலும் அவர்கள் என்ன ஸ்வைப் மிஷினை வைத்தா பிச்சை எடுக்க முடியும். லஞ்சம் வாங்கு முடியும்?
  மேலும் ஏழைகள்  நாள் முழுக்க உழைத்து  மாலையில் கள்ள நோட்டை ஊதியமாக வாங்கிச்செல்கிறார்கள்.
ஆனால் தற்போது  நல்ல நோட்டுக்காக இரண்டு மணிநேரம் வரிசையில் நிற்க கஷ்டப்படுத்துகிறார்கள். அவர்களை எதிர்கட்சிகள் தூண்டிவிடுகிறார்கள்.
மோடியின் திட்டம் தற்போதைக்கு சிரமமாக இருந்தாலும் பொறுத்திருந்து பாருங்கள் இது பாகிஸ்தானுக்கு எதிராக ஆயுதமே இல்லாமல் வென்ற போர் ஆகும்.
இது பிரதமர் மோடியின் பொருளாதார சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்கிறார்கள்

Leave a Reply