சுமித்ரா

 

அடர்ந்த காடு வழியாக 10 கி.மீ., தூரம் நடந்து சென்று பாடம் நடத்தும் ஆசிரியை
.
ஹூப்பள்ளி: கர்நாடகாவில், தினமும் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக,10 கி.மீ., நடந்து சென்று, மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சியால், ஏராளமான கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில், தார்வாட் மாவட்டத்தில் வசிக்கும் சுமித்ரா, 2005ல், அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில், ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இந்த கிராமத்தில் வசிக்கும், 400 பேரும் கூலித்தொழிலாளர்கள். இவர்கள், தம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர்.
ஆசிரியை சுமித்ரா, தான் பணிபுரியும் பள்ளியை சென்றடைய, நாள்தோறும், 19 கி.மீ., துாரம் பயணிக்கிறார். அதில், ஒன்பது கி.மீ., வரையே வாகனத்தில் செல்ல முடியும்.மீதமுள்ள, 10 கி.மீ., பாதையில், ஐந்து கி.மீ., அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. வழியில் பல மிருகங்கள் குறுக்கிட்டாலும், அஞ்சாமல், காட்டை நடந்தபடி கடந்து செல்கிறார். காட்டை அடுத்து, ஐந்து கி.மீ., துாரம் கரடு முரடான பாதையை கடந்து சென்று, பள்ளியை அடைகிறார் சுமித்ரா.
மழைக்காலங்களில், பள்ளியை சென்றடைவது மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், அதை பொருட்படுத் தாமல், கடந்த, 11 ஆண்டுகளாக, பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வருகிறார் சுமித்ரா. கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, கல்வி கற்பிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள சுமித்ரா, இதுவரை, வேறு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்ததில்லை.

Leave a Reply