சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஸா

படித்தேன்….

பிடித்தது….

பகிர்கிறேன்.
# “யாரைப் பற்றியும் கொஞ்சம் கூட குறை சொல்லிப் பேச மாட்டார். நிறைகளை மட்டுமே பேசுவார்.”

-இப்படி சொல்லிக் கொண்டிருந்தார் சோ !
ஆச்சரியமாக இருந்தது எனக்கு !

ஏனென்றால்

எளிதில் யாரையும் பாராட்டி விட மாட்டார் சோ !
ஆனால் அப்படிப்பட்ட சோ , உணர்ச்சிவசப்பட்டு ஒருவரைப் பாராட்டிக் கொண்டிருந்த , கொஞ்சம் பழைய வீடியோ ஒன்றை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது.
“நான் சந்தித்த மிகப் பெரிய மனிதர்களில் அவர் ஒருவர்..”என்று ஆரம்பித்து ,சோ சொன்ன சில விஷயங்கள் …

கொஞ்சம் நெஞ்சை நெகிழச் செய்யும் விஷயங்கள்தான் !
ஆம்.. மிகப் பெரும் செல்வந்தர் அந்த மனிதர் . ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்திலிருந்து பர்மாவுக்குச் சென்று வணிகம் செய்த குடும்பத்தில் பிறந்தவர்.

தற்செயலாக நேதாஜி எழுதிய புத்தகங்களைப் படித்த அவர் , நேதாஜியால் ஈர்க்கப்பட்டு , சுதந்திரப் போராட்ட வீரராக மாறி விட்டார்.

நேதாஜியின் நெருங்கிய நண்பராம். ஒரு நாள் கூட இவர் நேதாஜியை சந்திக்காமல் இருந்தது இல்லையாம்..! அப்படி ஒரு ஈர்ப்பு..உண்மை விசுவாசம்..!
ஒருமுறை ரங்கூனில் நடந்த ஒரு கூட்டத்தில் நேதாஜி அணிந்த பூமாலையை ஏலம் விட்டார்களாம் !

எதற்காக ? ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிதி திரட்டத்தான் இந்த ஏற்பாடு !

அந்தக் கூட்டத்தில் நேதாஜி கழுத்தில் போட்ட ஒரு மாலையை இவர் ஏலத்தில் எடுத்த தொகை எவ்வளவு தெரியுமா ? மூன்று லட்சம் ரூபாய்..!
# அவ்வளவு செல்வச் செழிப்போடு வாழ்ந்த அவரைப் பற்றி..

சோ தொடர்ந்து சொன்ன சில விஷயங்கள் :
“தன் சொத்து முழுவதையும் இந்திய தேசிய ராணுவத்துக்காக தியாகம் செய்த இவர் , இன்று வறுமையில் இருக்கிறார். ஆனால் அது பற்றி இவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
இந்த தேசத்தைப் பற்றியே சிந்தித்த ஒருவரை , இன்று மாநில மத்திய அரசுகள் கண்டு கொள்ளவில்லை.

நானும் கூட என்னால் முடிந்த அளவுக்கு பெரும் முயற்சி செய்து பார்த்தேன்.ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை.

ரொம்ப நெகிழ்ந்த மனம் கொண்டவர் . என் மீது மிகவும் நம்பிக்கை உடையவர். எப்போது சந்தித்தாலும் மனதார ஆசீர்வாதம் பண்ணுவார்.
ஒருமுறை துக்ளக் ஆண்டு விழாவில் அவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தபோது , கை தட்டல் நிற்க நீண்ட நேரம் ஆயிற்று..!
ஒரு உண்மையான காந்தியவாதிக்கு உதாரணம் அவர்.

யாரைப் பற்றியும் கொஞ்சம் கூட குறை சொல்லிப் பேச மாட்டார். நிறைகளை மட்டுமே பேசுவார்.”
# சோ நெகிழ்வோடு இப்படி சொல்லி முடித்தார்.
மத்திய அரசாங்கம் தரும் பென்ஷனை மட்டுமே நம்பி வாழும் நிறைவான அந்த மாமனிதர் , இப்போது எப்படி இருக்கிறார் என அறிந்து கொள்ள இணையத்தில் தேடினேன்.

கிடைத்த பதில் :
“சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஸா இறைவனடி சேர்ந்தார்.

அவருக்கு வயது 94.

அன்னாரது ஜனாஸா 04-01-16 மாலை 4 மணிக்கு (அஸர் தொழுகைக்குப் பின்) நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இடம்: சென்னை தங்க சாலை, வீராசாமி தெரு, ஏழு கிணறு, சென்னை-1.

அவரது குடும்பத்திற்காக பிரார்த்திப்போம்.”

.

# சொந்த சகோதரர்கள்

துன்பத்தில் சாதல் கண்டும்

சிந்தை இரங்காரடி கிளியே

செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடி – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

.

#அமீர் ஹம்ஸா .
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே சித்தரித்துப் பழகி விட்ட இந்த சமூகத்துக்கு…
– இப்படிப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியைப் பற்றி எடுத்துச் சொன்ன சோ அவர்களை பாராட்டத்தான் வேண்டும்..!

Leave a Reply