சாராய ஆலை நடத்துபவர் முதல்வராக கூடாது! சசிகலாவை விளாசிய மாணவி

சட்டகல்லூரி மாணவி நந்தினி தமிழகத்தில் மிக பிரபலமானவர். காரணம் இவர் இளம் வயதிலேயே அநீதிக்கு எதிராக பல போராட்டங்களை துணிச்சலுடன் நடத்தி வருபவர்.

அதிலும் முக்கியமாக, ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்களை குடி நோயாளிகள் ஆக்கும் இந்த மதுவை அரசே நடத்துவது கேவலம் என தன் தந்தையுடன் போராடி பல முறை சிறை சென்றுள்ளார்.

தற்போது தனது படிப்பை முடித்துள்ள நந்தினி பகத் சிங் புரட்சிகர இயக்கம் என்னும் அமைப்பை தொடங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், தற்போது அதிமுகவின் பொது செயலாளராக இருக்கும் சசிகலா அடுத்து தமிழகத்தின் முதல்வராக முயற்சித்து வருகிறார்.

இது நடக்க கூடாது. தமிழகத்தில் அதிக அளவில் மது சப்ளை ஆவது மிடாஸ் மது நிறுவனத்திடமிருந்து தான்.

இதை நடத்துவது சசிகலாவின் உறவினர்கள் என்பது ஊரறிந்த விடயமாகும்.

மது ஆலை மூலம் இவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருகிறது.

இப்படி மது ஆலை நடத்துபவர்கள் தமிழகத்தின் முதல்வராக எக்காலத்திலும் வரக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தனது மது எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என நந்தினி கூறியுள்ளார்.

Leave a Reply