சரியான தேர்வை செய்துவிட்டுத் தான் சென்று இருக்கிறார் ஜெயலலிதா

அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மனிதர்

கட்சித் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இருக்கிறார்

தவறு நடந்துவிட்டது தலைமைச் செயலாளர் போகவேண்டிய ஆள்தான் என்று தெரிந்தவுடன்
சப்பைக்கட்டு கட்டாமல் அடுத்த தேர்வினை செய்துவிட்டார்

சசிகலாவின் கனவு கானல் நீராகிவிட்டது

இனி அதிமுக அவ்வளவு தான் என நினைத்தேன்

ஆனால் கட்சி பிழைத்துக் கொள்ளும்

எம்ஜிஆர் கண்ட இயக்கம் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்

தந்தி போன்ற ஊடகங்கள் குண்டு கல்யாணம் பாத்திமா போன்றவர்களை லாரிகளில் ஏற்றி
சசிகலாவின் கால்களில் விழ வைத்து ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர்

ஒபிஎஸ் நாளுக்கு நாள் தனது பிடியை இறுக்குகிறார்

அவரிடமே கட்சி ஆட்சி பொறுப்பு இரண்டுமே இருக்கப் போகிறது

சில நாட்களில் சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் பதவி ஏற்கலாம்

சமீபகாலமாக ஒபிஎஸ் சசிகலாவை சந்திப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது

ஒரு குழப்பமான சூழ்நிலையை தவிர்க்க ஒபிஎஸ் கரங்களை பலப்படுத்துவது அவசியம்

குறுக்கு வழியில் தலைமையை பிடிக்க நினைப்பவர்கள் தாங்களாகவே விலகி ஒடி விடுவர்

பன்னீர் செல்வம் தலைமையில் இந்த ஆட்சி தொடர வேண்டும்

Leave a Reply