சத்திரப்பட்டி அய்யா அழகுராஜ்

தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்.

          ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை புரட்டாசி நான்காவது சனி கிழமையை முன்னிட்டு நம்ம சத்திரப்பட்டி முதலாளி அய்யா அழகுராஜ் பண்ணாடி நம்ம சாலியர் மடம் திருவண்ணாமலை யில் 4 மூடை அரிசி எடுத்து அன்னதான சாப்பாடு போடுகிறார்.இந்த அன்னதானம் அழகுராஜ் பண்ணாடி அப்பா காலத்திலிருந்து சுமார் 50 வருசத்திற்கு மேலா தொடர்ந்து நடத்திட்டுவருகிறார்கள்.அழகுராஜ் முதலாளியோட அப்பா பாவு தோய்ந்த துட்ட உண்டியலில் சேர்த்து வைத்து ,புரட்டாசி மாதம் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தில் அன்னதானம் போட்டார்.அப்ப உண்டியலில் சேர்த்து வைக்கும் போது பண கஷ்டம் வரும் போது அதில் துட்டு எடுப்போம் என அழகுராஜ் அம்மா கேட்டாலும் அப்பா அதற்கு அனுமதிக்கமாட்டார்.அப்பா இறந்த பின்னர் தன் கடும் உழைப்பால் கோடீஸ்வரான நம்ம முதலாளியும் அவர் தம்பி அய்யப்ப பகதர் சுந்தர்ராஜ் (மிகப்பெரிய பக்திமான்,விபரம் தெரிந்ததிலிருந்து மாமிசம் சாப்பிடாத சைவம்,அதவிட டீ,காபியும சாப்பிடாத பண்ணாடி) அவங்க இரண்டுபேரும் சேர்ந்து இந்த அன்னதானத்தை தொடர்ந்து நடத்திட்டு வருகின்றனர்.இன்னிக்கு நடக்கும் அன்னதானத்திற்கு அழகுராஜ் எட்டு பிள்ளைகளும் வந்து கலந்து அவங்க கையினால் சாதம் பறிமாறுவார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஐந்துபட்டி பண்ணாடிமார்கள், சத்திரபட்டி மூன்று ஊர் பண்ணாடிமார்கள் ,இராஜபாளையம் பண்ணாடிமார்கள்,பட்டி,சுந்தரபாண்டியம்,புதுப்பட்டி பண்ணாடிகள் எல்லாரும் திருவண்ணாமலை கோவிந்தமூர்த்தியை தரிசனம் செய்து இந்த அன்னதானத்தில் சாப்பிடுவார்கள்.இந்த திருவண்ணாமலை மடத்தில லைட்டு பேன் தண்ணி மோட்டார் போட்டது,எல்லாம் இந்த அழகுராஜ் பண்ணாடிதான்.அவரது எளிமையை பார்ப்போம்,இன்னைக்கு (08.10/2016) காலையில் திருவண்ணாமலைக்கு போக பஸ்க்காக ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்டில் நிற்கும் போது ஒரு துணியை கையில் வைத்துக்கொண்டு அழகுராஜ் அய்யாவும் பஸ் ஏற வந்தார். ஆச்சரியப்பட்டு என்னுடன் வந்த எல்லாரும் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு பேச்சு கொடுத்தோம். அய்யா நீங்க போய் பஸ்ஸிலையானு கேட்டோம்.இவர் நினைத்தால் எந்த காரிலும் வரலாம். அவர் சத்திரபட்டியிலிருந்து பஸ்ஸில் வந்து தெற்கு பட்டி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு போனதாகவும் ,அங்கு கோவில் பூட்டிஇருந்த்தால் கேட்டில் மாலையை தொங்கபோட்டுவிட்டு சாமி கும்பிட்டு வந்த்தாக சொன்னார். இவர் கோவிலுக்கு வந்ததை சொன்னால் பூசாரி ஓடி வருவார்கள். ஆனால் இவர் அதை செய்யவில்லை.அழகுராஜ்அய்யாவின்  எளிமையை கண்டு வியந்தோம்.இப்படி ஒரு கோடீஸ்வர்ரா.அவரையும் நம்மையும் சுயபரிசோதனை செய்து பார்த்தால் நாம் அனைவரும் அய்யாவின் எளிமையை நினைத்து வெக்கப்பட வேண்டும்.அய்யாவை இன்று சந்தித்தற்காக பெருமை அடைகிறேன்.

அய்யா அழகுராஜ் பண்ணாடி பற்றி கூடுதல் தகவல்….

           76 வயதான பண்ணாடி  ரூ1000/_ மதிப்புள்ள செல் போன் உபயோகப்படுத்தி வருகிறார்.இவர் சத்திரபட்டியில் தனது சொந்த செலவில் ஏழை பண்ணாடிமார்கள் சுமார் 40 பேர்களுக்கு தினம்தோரும் மதியம் சாப்பாடு போடுகிறார். இவர் மனைவி குருவம்மாள் மீது அதிகம் பிரியம் கொண்டவர்.எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் மனைவியுடன் தான் செல்வார்.தனது இந்த வெற்றிக்கு எனது மனைவி குருவம்மாள் தான் காரணம் என அழகுராஜ் பண்ணாடி அடிக்கடி சொல்லுவார்.மேலும் சத்திரபட்டி பள்ளி வளர்ச்சிக்கு முக்கிய காரணமானவர். எந்த அரசு பள்ளியும் சாதி பெயருடன் இருக்காது.இவரால்தான் சத்திரப்பட்டி பள்ளிக்கு அரசு சாலியர் மேல் நிலை பள்ளி என இப்பவும் அழைக்கப்படுகிறது.இவரால் சாலியர் சமுதாயமும், இவர் பிறந்த சத்திரபட்டியும் பெருமை பெற்றது. தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்கத்தின் நிரந்தர பொருளாளர்.இவரை வாழ்த்துவோம்.

Leave a Reply