“சகாயம் நீ பார்த்துக்கோ”..! பன்னீருக்கு பாதுகாப்பாக இரு..!! -மோடி ..!!

‘‘சகாயம் நீ பார்த்துக்கோ’’..! பன்னீருக்கு பாதுகாப்பாக இரு..!! -மோடி ..!!
By LIVEDAY

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் கடும் குழப்பங்களும், வதந்திகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவிற்கும், பன்னீருக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் அதற்கான திரைமறைவு வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் கட்சியில் ஆதரவு பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் அதிமுக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று பிரதமர் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்தாக கூறப்படுகிறது.

சசிகலாவின் கட்டுப்பாட்டில் கட்சி செயல்படுவது சரியானது அல்ல என்றும் நீங்களே கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்பேற்க வேண்டும் பன்னீர்செல்வத்திடம் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருமான வரி சோதனையின் மூலம் கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீடு, அவரது அலுவலகம் மற்றும் அவரது மகன், உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொழில் அதிபர்கள் என மொத்தம் 13 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 40-க்கும் மேற்பட்ட ஆவணங்களும், புதிய ரூபாய் நோட்டுகளாக பல லட்சங்களும், தங்கங்களும், கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமை செயலர் ஒருவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி சோதனை, தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ராம மோகன ராவ் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு ராம மோகன ராவ் பதவி நீக்கம் செய்யப்பட்டால் புதிய தலைமைச் செயலராக இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியான சகாயத்தை நியமனம் செய்யலாம் என்றும் பிரதமர் மோடி விரும்புவதாக தகவல் தெரிவிக்கின்றன.

புதிய தலைமை செயலாளர் பதவிக்கு சகாயம் சரியானவரே என்று சமூக வலைதளங்களில் ஆதரவுகள் பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply