காமராஜரைப் பற்றிய 20 அரிய தகவல்கள்

#காமராஜரைப் பற்றிய 20 அரிய தகவல்கள்:- அறிந்ததும் அறியாததும்

***************************************

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்

போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்

சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்

ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட

பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி,

நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற

மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்

குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்

சொல்லி இருக்கிறார்..
5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில

தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்

காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து

போய் இருக்கிறார்கள்.
6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,

திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி

கட்டி போல கரைந்து மறைந்து விடும்.
7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்

உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக

சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக

ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்

பெரிய தொகையாகும்.
9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட

காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்

காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்

பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.

எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்

கொள்வார்.
11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக

மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்

அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற

ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்

பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட

சொன்னால், ” என்னய்யா… இது?” என்பார்.

கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்”

வெட்டுவார்.
13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்

மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில்

பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய

தொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான்

இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை

ஏற்படுத்தியது.
14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து

வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்

“காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை

சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்

அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு

விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்

கொள்வார்.
17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்

ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்

வைத்திருந்தார்.
18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்

தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா

வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை

ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை

பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.

அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234

பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்

பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.

2 comments

  1. ///நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்///

    முடியல…. வேணாம்… அழுதிடுவேன் !
    காமராசரின் ஆங்கில புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு!
    அகில இந்திய காங்கிரஸ் தலைவரா காமராசர் இருந்தபோது புதுடெல்லியில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்னொரு வடஇந்திய காங்கிரஸ் தலைவர் காமராசரை பார்த்து ஆர் யு ரெடி are-your ready என்று கேட்க …. அதற்க்கு காமராசர் நான் ரெட்டி இல்ல நாடார் I am NOT Reddy, I am Nadar என்று சொன்னார். வடஇந்திய பத்திரிக்கைகள் அந்த செய்தியை அன்று போட்டு கிழி கிழி என்று கிழித்தது.

Leave a Reply