ஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நிற்ககூடாது – திடீர் தடா..!!!

ஓபிஎஸ் செல்லும் வழியில் கட்சிக்காரர்கள் நிற்ககூடாது – திடீர் தடா..!!!

முதல்வர்ஜெயலலிதாவை தொடர்ந்து ஓபிஎஸ் செல்லும் போதும் கட்சிக்காரர்கள் நின்று வணக்கம் தெரிவித்து வந்த நிலையில் ஓபிஎஸ் செல்லும் வழியில் நிற்க கூடாது என திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அவரது சிறப்பே வழியில் நின்று வணங்கும் தொண்டர்களை பார்த்து சிரித்தபடி கையசைத்து செல்வதுதான். ஏதோ தொண்டர்களை பார்த்து கையசைத்து செல்கிறார் என்று நினைத்தால் அதுதான் இல்லை என்பதை அவரால் பயன் பெற்ற பல தொண்டர்கள் சொல்வதை வைத்து காணலாம்.

சாலையில் நிற்கும் தொண்டர்களை தினமும் பார்த்தபடி செல்வார் ஜெயலலிதா, பின்னர் ஒருநாள் போலீசார் ஓடிவந்து குறிப்பிட்ட தொண்டரை தலைமை செயலகத்துக்கு அழைத்து செல்வார். அவரது குறைகள் கேட்டு நிவர்த்திக்கப்படும். அல்லது திடீரென போலீசார் அந்த தொண்டரிடம் மனுவை பெற்று செல்வார். அவரது கோரிக்கையோ , அல்லது கட்சி நிர்வாகிகள் மீது புகார் கேட்டு சரி செய்யப்படும்.

இப்படி ஒரு நடைமுறை அதிமுகவில் உண்டு. ஓபிஎஸ் முதல்வராக வந்த பிறகு தொண்டர்கள் சிலர் அவர் வரும் வழியில் நின்று வணங்கி வந்தனர். இந்நிலையில் அதே போல் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வட்டச்செயலாளர் தம்பியும் அதிமுக சார்பில் கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் இருக்க்கும் மனோகரன் எனபவர் ஓபிஎஸ் ப்போகும்போது நின்று வணங்கி உள்ளார்.

அப்போது போலீசார் அவரை நெஞ்சில் கைவைத்து அடிக்காத குறையாக விரட்டியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் ஓபிஎஸ்போனவுடன் அவர் கேட்டபோது இனி யாரும் வழியில் நிற்க கூடாது என மேலிருந்து எங்களுக்கு உத்தரவு நாங்க அதை நடைமுறை படுத்துகிறோம் கோபித்துகொள்ளாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply