ஒட்டன்சத்திரம் திரு. B.முருகானந்தம்,

ஒட்டன்சத்திரம் திரு. B.முருகானந்தம், Inspector of Income-tax at Salem, முன்னாள் இந்திய கபாடி வீரர்

1990 முதல் 2005 வரை இந்திய அளவில் கபாடி விளையாட்டில் சிறந்து விளங்கிய அண்ணார் அவர்கள் பல முறை தமிழக அணிக்காக பங்கேற்று வெற்றி பெற முக்கிய ஆல் ரவுண்டராக ஜொலித்தவர்.. தேசிய சேம்பியன் சிப் போட்டியில் தமிழக அணி ஹாட்ரிக் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர்.. இவரது காலகட்டத்தில் தேசிய அளவில் நம்பர் ஒன் ரைடர் என்று பெயரெடுத்தவர்…

இன்றைய இளம் வீரர்கள் தெரிந்து கொள்ள ஒரு முக்கிய தகவலை கீழே பதிவிடுகிறேன்..
1995 ம் ஆண்டு பரமத்தி வேலூரில் நடந்த 44 வதுதேசிய சீனியர் கபாடி சேம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்காக அண்ணார் அவர்கள் விளையாடினார்… தமிழக அணி இறுதிப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மிகவும் விறு விறுப்பாக நடந்த போட்டியின் இடை வேளையின் போது எதிரணி இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது..10 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் ஆரவாரம்…..தூர்தர்சன் TV யில் நேரலை…. என பரபரப்பான சூழ்நிலையில் போட்டியினை நேரிடையாக காலரியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த, கால்நடை மருத்துவரான அண்ணாரின் தந்தை அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்…

இருப்பினும் ஆட்டத்தை பிற்பகுதியில் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் முடித்த பிறகே தனது தந்தையின் பூத உடலை காணச் சென்றார்… தமது தந்தையை இழந்த சோகத்திலும் கபாடி விளையாடிய, கபாடியை நேசித்த ஒரு மாவீரன்… நான் நேரிடையாக பார்த்த அனுபவம் இது….தற்போது நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது.. இது போன்று ஒரு நிகழ்வு எவருக்கும் நடக்கக் கூடாது…
இந்த பதிவை இங்கு பதிவிட காரணம், அன்றய வீரர்கள் கபாடி மீது கொண்டிருந்த பக்தி, தியாகத்தைப் பற்றி இன்றய வீரர்கள்அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே…

தேவேந்திரன் மணி.

Leave a Reply