ஐடி வேலை – டிகிரி தேவையில்லை

+2 முடித்தவுடன் ஐடி வேலையில் சேருவதற்கான வாய்ப்பினை ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. கல்லூரிப் படிப்பினை முடிக்காமலே பொறியாளர் ஆவதற்கான வாய்ப்பு இந்திய மாணவர்களுக்குக் காத்திருக்கிறது.
கல்லூரிக்கு நேரடியாகச் சென்று ’கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்தி வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் பள்ளிக்கல்வி முடித்தவுடன் நேரடியாக ஐடி வேலையில் சேருவதற்கான வாய்ப்பினை ஹெச்.சி.எல். அறிவித்துள்ளது. இதன்படி +2 பொதுத் தேர்வில் 85% , சிபிஎஸ்இ- 80% மேல் வாங்கும் சிறந்த 200 மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. நாடு முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் இந்த 200 மாணவர்களுக்கும் ஒன்பது மாத கால பயிற்சி வழங்கி நிறைவில் ஆண்டுக்கு 1.8 லட்சம் சம்பளத்தில் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒன்பது மாதகால பயிற்சியில் அடிப்படை பொறியியல் கல்வி, மென்பொருள் தேர்வு போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் விரும்பினால் விடுமுறைக் காலங்களில் பகுதி நேர பட்டப்படிப்பு படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான திட்டங்கள் மூலம் வேலையில்லா திண்டாட்டம் குறையும் எனவும் தங்கள் நிறுவனத்துக்கு அர்ப்பணிப்பான ஊழியர்கள் கிடைப்பர் எனவும் ஹெச்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thanks – vikatan

Leave a Reply