ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை – ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்
-சி.கண்ணன்

டாக்டர் பிரியா ராமச்சந்திரன்
சென்னையில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷன்’ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.

இது தொடர்பாக ரே ஆஃப் லைட் பவுண்டேஷன் நிறுவனரும், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் குழந்தை கள் புற்றுநோயால் பாதிக்கப் படுகின்றனர். இவர்களில் 80 சத வீதம் குழந்தைகள் ரத்த புற்று நோய் (லூகீமியா) பாதிப்புக்கு ஆளாகின்றனர். புற்றுநோய்க ளிலேயே ரத்தத்தில் வரக்கூடிய புற்றுநோயை 3 ஆண்டு சிகிச்சை யில் பூரணமாக குணப்படுத்த முடியும். இதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை செலவாகும். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முழுமையாக சிகிச்சை அளித்தால் 85 சதவீதம் குழந்தைகள் குணமடைவார்கள். ஆனால் இந்தியாவில் போதுமான சிகிச்சை கிடைக்காததால் 40 சதவீதம் குழந்தைகள் மட்டுமே குணமடைகிறார்கள். சிகிச்சைப் பெற பணம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இலவ சமாக சிகிச்சை அளிக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் நன்கொடை யாளர்கள் மூலமாக திரட்டப்பட்ட நிதியை கொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 124 குழந்தை களுக்கு சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 100 குழந்தை கள் புற்றுநோயில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர். இவர்களில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம். ஆரம்பத்தில் ஓர் ஆண்டுக்கு, 2 குழந்தைகளுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த அளவுக்கு தான் அமைப்புக்கு நிதி கிடைத் தது. தற்போது ஏழை குழந்தை களுக்காக நிதி கொடுப்பவர்கள் அதிகரித்துள்ளனர். அதன் பயனாக கடந்த ஆண்டு 15 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 குழந்தை களுக்கு சிகிச்சை அளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி கிடைத்துள்ளது. தமிழகத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் ஆந்திராவில் இருந்தே புற்றுநோயால் பாதிக் கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு வருகின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகள் சென்னை உட்பட தமிழகத்தில் எங்கு இருந்தாலும் சிகிச்சைக்காக காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனைக்கு வந்தால், எங்களுடைய அமைப்பின் மூலம் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

‘குழந்தைகள் புற்றுநோய் தீர்வு’ என்ற பெயரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் குறித்த நிகழ்ச்சி காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பங்கேற்கிறார். ரத்த புற்றுநோயில் இருந்து முழுவதுமாக குண மடைந்த குழந்தைகள் தங் களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் rayoflightindia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு டாக்டர் பிரியா ராமச்சந்திரன் தெரிவித்தார்.

The hindu

Leave a Reply