“உண்ண”தமான செயலுக்காக

உணர்வுபூர்வமான
“உண்ண”தமான செயலுக்கான பதிவு!
****************
இன்று காலை 10 மணியளவில், எங்கள் ஊரில்(திருவரம்பூர் காட்டூர், தெற்கு காட்டூர்) உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றேன்! நான் சாப்பிட்டுகொண்டிருக்கும்பொழுது கடையின் முதலாளியும், அவரது மனைவியும்,வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிக்கொண்டே, பார்சல் பொட்டலங்கள் நிறைய கட்டினர்! நான் கேட்டேன் ” மணி 10 ஆகிவிட்டது ஏன் பார்சல் நிறைய கட்டுகிறீர்கள் ” என்றதற்கு அவர்கள் அண்ணே! இது எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு இல்லை! இல்லாதவர்களுக்கு (பிச்சைகாரர்கள் என்று கூட சொல்லவில்லை) என்றார்! “எத்தனை பேருக்கு” என்றேன்! காலையில் மினிமம் 10 பேருக்கு! டிபன் தீந்துச்சுன்னா பணம் கொடுப்போம் ” என்றார்கள் கூலாக!

பேசியபோதே சில இல்லாதவர்கள் பார்சல் வாங்கினர்! நான் போட்டோ எடுக்கிறேன் என்றேன்! எங்களை அசிங்கபடுத்தாதிர்!
நாங்கள் விளம்பரத்திற்காக செய்யவில்லை!”
என்றனர்” அசந்துவிட்டேன்! நான் “கட்டிய பார்சலையாவது…..” என்றதற்கும் மறுக்க,
பிடிவாதமாக உங்களையாவது போட்டோ அவசியம் எடுக்கவேண்டும் என்றேன்!
அசந்துவிட்டேன்!
பைனான்சும் கட்டுகின்றனர்!
இதில் என்ன அழகு என்றால் சர்க்கரை வியாதிகாரர்களுக்கு தனி பார்சல்!
” உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!
அமைதியாக!
ஆரவாரமில்லாமல்,
விளம்பரமில்லாமல்,
ஒரு நாளைக்கு 400 ரூபாய் மதிப்பு இலவச உணவு என்றால் மாதம் 12,000 % வரை ஆகும் பணத்தை கூட சட்டை செய்யாமல் தர்மம் பண்ணும் ” தர்ம கர்த்தா தம்பதிகள் “ரகுபதி உணவக உரிமையாளர்கள்
திரு ரமேஷ்,திருமதி சங்கீதா அவர்களை பாராட்டி வணக்கம் சொல்வோம்!
(தயவு செய்து படித்துவிட்டு பகிருங்கள்)
சிறிய கடை வைத்து பெரிய சேவை!

Leave a Reply